பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ ஆன்ழெல் : கடிதத்தில் கையெழுத்தில்லை. நீ அவன் பெயரைக் கேட்கிறாய். நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்த ஒற்றன் இறக்கும்போது: ஏதோ பெயர் சொன்னானாம். காவற்காரர்கள் அந்த மடையர்கள் மறந்துவிட்டார்கள். ஒருவன்ரொதேரிழோ என்கிறான். மற்றவன் பான் தொல்போ என்கிறான். அவன் சொல்கிற பெயர் சரியல்ல என்று இவன் சொல்கிறான். இவன் சொல்வது சரியல்ல என்று அவன் சொல்கிறான். தீஸ்ப் : அந்தக் கடிதம் உங்களிடம் இருக்கிறதா? ஆன்ழெல் இதோ என்னிடம் இருக்கிறது. நீ பார்த்தால் ஒருக்கால் இது யாருடைய எழுத்தென்று சொல்லலா மல்லவா. அதற்காகத்தான் இதோ வைத்திருக் கிறேன். (கடிதத்தை எடுத்து) இதோ. திஸ்ப் : காட்டுங்கள். ஆன்ழெல்லோ : (ஆன்ழெல்லோ கடிதத்தைக் கோபமாகக் கையில் கசக்கிக்கொண்டே) நான் எந்த நிலையில் இருக் கிறேன்.தெரியுமா? மலிப்பியரியின் மனைவி மீதேஒருவன் கண்ணை வைத்துவிட்டான். எவ்வளவு தைரியம் பார்த்தாயா அவனுக்கு.வேனிஸ் பொன்னேட்டில் என் பெயர் பொறிக்கப்பட்ட இடத்தில் மாசையல்லவா உண்டாக்கிவிட்டான் அவன். அவன் தலை இரும்பென்றல்லவா நினைத்துவிட்டான். எவ்வளவு மன உறுதி அவனுக்கு. அந்த இரவு இந்த அறையில் நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன், புலிக்குகை யில் புல்வாய், அரிமா இருக்க வேண்டிய இடத்தில் நரிமா. சர்வாதிகாரியின் அரண்மனையில் அதுவும் அந்தப்புறத்தில் ஒரு சாக்கடைப்புழு ஊம் என் மனம் கொதிக்கிறது. என் உள்ளமே வெடித்துவிடும்போல் தோன்றுகிறது. இருக்கட்டும். இதே இந்த இடத்தை அவன் குருதியால் கோலமிடாவிட்டால் நான்