பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 73 ஆன்ழெல்லோ மலிப்பியரியல்ல இதக்கடிதத்தை யார் எழுதினார்கள் என்று சொல்பவருக்கு என் தந்தையின் வாள். என் உயிர், என் வலக்கை. இன்னும் எதுவேண்டுமானாலும் தருவேன். - திஸ்ப் : இப்படிக் காட்டுங்களேன், அதைப்பார்ப்போம். ஆன்ழெல் : பார்-இந்தா (தீஸ்ப்-கடிதத்தைப் பிரித்துப்பார்க்கிறாள். தனக் குள்ளே) ரொதோல்போதான்! ஆன்ழெல் : இது யாருடைய எழுத்தென்று தெரிகிறதா? திஸ்ப் : இருங்களேன் நான் படித்துப்பார்க்கிறேன். (அவள் படிக்கிறாள்:) கத்தேரினா என் அன்பே! பார்த்தர்யா கடவுள் நம்மைக் காப்பாற்றினார். அன்றிரவு உன் கணவனிடத்திலிருந்தும் அந்தப் பெண்ணிடத்தி லிருந்தும் அவரே நம்மை மீட்டார். இல்லையென்றால் தம் கதி , ' (தனக்குள்ளே-) அந்தப் பெண்! - (மீண்டும் படிக்கிறாள் :)- என் உயிரே என்னால் காதலிக்கப்பட்ட பொருள் நீ ஒன்றுதான். எனக்காக வருந்தாதே. நான் பாதுகாப்போடே பயமின்றி இருக்கிறேன்-' ஆன்ழெல் : என்ன தெரிகிறதா? யார் எழுத்து? திஸ்ப் : (கடிதத்தை ஆன்ழெல்லோவிடம் கொடுத்து) ஊகும் இது யாரெழுத்தென்று தெரியவில்லை. - ஆன்ழெல் தெரியவில்லையா? கடிதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? இக்கடிதத்தை எழுதியவன் இந்தப் பதுவில் சில நாட்களாகத்தான் இருக்கிறான் போல் தோன்றுகிறது. இது பழைய காதலரின்