பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்வாணிதாசன் 79> வைக்கிறேன். அவன் பெயரை மட்டும் இதன்கீழ் எழுதிவிடு போதும். நீ கூற வேண்டியதில்லை. நீ தப்பித்துக் கொள்வாய். கத்தேரினா பிரகாதினி நான் சொல்வதைக் கேள் நான் என் வாக்கை என்றும் தவறியது கிடையாது. அவனைக் காட்டிக் கொடுக்கவேண்டும். அல்லது நீ சாக வேண்டும். கத்தேரினா : ஒரு நாளாவது எனக்கு ஒய்வு கொடுங்க ளேன். * ஆன்ழெல் ஒரே ஒரு மணி நேரந்தான் (போகிறார்). களம்-5 (கத்தேரினா தனியாகக் கதவருகில் போகிறாள்) இந்தக் கதவு-ஐய்யோ இதை யாரோ மூடுகிறார்களே. இந்தச் சன்னல் - (சன்னல் அருகில் போகிறாள் பார்க்கிறாள்) - எவ்வளவோ உயரமாக இருக்கிறதே. (நாற்காலியில் வந்து விழுகிறாள்.) சாவு! கடவுளே மிகப் பயங்கரமான நினைவு. அது எதிர்பார்க்காதபோது சாவது என்றால் - ஐயோ. உடல் நடுங்குகிறதே-இன்னும் ஒரே மணி நேரந் தானா என் வாழ்க்கை. இந்த நிலைமை உங்களுக்கு வந்தாலல்லவா தெரியும். ஆம்-நான் இன்னும் ஒரே ஒரு மணி நேரந்தான் வாழ்வேன். பிறகு சாகப் போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். நினைத்துப் பாருங்கள்- எவ்வளவு கொடுர மானது- பயங்கரமானது என்னால் இந்த நாற்காலியில் உட்கார்ந்து இருக்கமுடியவில்லையே. தலை சுற்றுகிறது -சிறிது படுத்தாவது இருப்போம். (கட்டிலருகில் போகிறாள்) சற்றுப் படுப்போம்.