பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.8 D. விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ (கட்டிலின் சீலையை விலக்குகிறாள்-பயந்து அதை விட்டு ஓடி வருகிறாள்-அங்கே கழுத்தை வெட்டு வதற்காக மரத்தாலான பலிபீடம். கருந்துணியால் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. அதனருகில் ஒரு கொடுவாள்) கடவுளே-இது என்ன இது? என்ன நான் பார்க்கிறேன் ! ஐய்யோ பயங்கரமாக இருக் கிறதே.-(கட்டில் திரைச் சீலையை விட்டுவிட்டுப் பயந்து நடுங்கிக்கொண்டே ஓடிவருகிறாள்) வேண்டாம். ஐயோ கடவுளே வேண்டாம். இது எனக்காகத்தான்; என்னைக் கொல்வதற்காகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. (விழுந்து நகர்ந்துகொண்டே நாற்காவியின் அருகில் வருகிறாள்.) ஊகும். நான் திரும்பிப் பார்க்கமாட்டேன். திரும்ப மாட்டேன். கடவுளே-கடவுளே! இது என்ன கனவா? உண்மை தானா? இல்லை இங்கு நடப்பதெல்லாம் உண்மைதான். அது என் பலிபீடம் - வாள். (சிறு கதவு திறக்கிறது-ரொதோல்போ வருகிறான்) களம்-6 கத்தேரினோ-ரொதோல் போ (கத்தேரினா தனக்குள்ளே)-கடவுளே . - - ரொதோல்போ! ரொதோல் : (ஓடிவந்து) ஆம் நான்தான் கத்தேரினா ஒரே ஒரு வினாடி... என்ன உன்முகம் ஒரே வெறுப்பாக இருக்கிறதே ஏதோ குழப்பத்தையல்லவா காட்டுகிறது உன்முகம். - - கத்தேரினா : ஆம் குழப்பம்தான்-இப்படித் துடுக்குத் தனமாகப் பட்டப்பகலிலே வந்தால். : ரொதோல் : எனக்கு ஒரே குழப்பமும் ஐயமுமாக இருந்தது. என்னால் இருக்கமுடியவில்லை.