பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 89 எம்மவரை இடித்துக் கூறுவது. ஒரு நல்ல வார்த்தை என்றாவது என் செவி கேட்டிருக்குமா? இப்படி நடப்பதுதான் மனைவியை இன்பமாக நடத்துவது என்பது உன் சித்தாந்தமா! பெண் பிறப்பென்பது எவ்வளவு இழிவானது என்பதை உணரவேண்டுமா னால் என்னைப் போலத் துன்பப்பட்டாலல்லவா தெரியும்! அரசே! ஆம் உம்மைத் திருமணம் செய்து கொள்வதற்குமுன் நான் ஒருவரைக் கர்தலித்தேன். இன்னும் காதலிக்கிறேன். அதற்காகத் தானே என்னைக் கொல்லப்போகிறீர்கள் . எது உண்மை? நடந்ததென்ன? அது தேவையில்லை உங்களுக்கு. ஏதோ கடிதம் இருக்கிறது. அதுவேபோதும் மறைவாக நஞ்சூட்டிக் கொன்றுவிடலாம் என்கிற தைரியம். ஏன் அதுதானே உங்கள் எண்ணம் இது ஆண்மையல்ல கயமை. . (தீஸ்ப் இருக்கும் பக்கம் திரும்பி) இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? . ஆன்ழெல் : நாவை அடக்கிப்பேசு. கத்தேரினா : (தீஸ்பைப் பார்த்து) - நீங்கள், நீங்கள்? உங்கள் செய்கையும், நடத்தையும் அழகாக இருக் கிறது. என் கணவரின் வெள்ளாட்டி, நீங்கள் வைப்பாட்டி யாக உங்களுக்கு என்னைத் தீர்த்துக் கட்டவேண்டிய பொறுப்பு இருக்கத்தான் செய்யும். வைப்பாட்டிகளின் தொழிலே அதுதானே. தனக்கு அடிமையாக இருக்கின்ற ஆணை மீண்டும் அடிமை யாக ஆக்கிக் கொள்ள-அவன் கட்டிய மனைவியை எட்டியிருந்து கண்காணித்து இல்லாததையும் பொல்லாததையும் கூறிக் கோள்மூட்டுவதும், கொலை செய்யத் துரண்டுவதும்தானே அவர்கள் தொழில். இந்த நஞ்சுகூட ஒருக்கால் நீங்களே கொடுத்திருக்கலாம். ஏன் அப்படித்தானோ