பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் . も 7° (தடுமாறிக்கொண்டே பூஜை அறைக்குள் போகிறாள்) நான் அங்கே சாகப்போகிறேன், ஆம் கடவுளின் முன்பு-அமைதியாக தனியாக உங்கள் கண்களிலே படாமல் சாகப்போகிறேன். (பூஜை அறையின் வாயிற்படியைத் தட்டுத் தடுமாறிப் பிடித்துக்கொண்டே) நான் கடவுளைத் தொழுது கொண்டே சாகப் போகிறேன். (பூஜை அறைக்குள் போகிறாள்.) ஆன்ழெல் : ஏப்! யார் அங்கே! (வேலைக்காரன் வரு கிறான்) இந்தா என் இரகசிய அறையின் சாவி! அங்கே இரண்டு மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்றும் பேசாமல் அவர்களை இங்கே அழைத்துவா. (வேலையாள் போகிறான்) . (தீஸ்பைப் பார்த்து) அறையில் இருக்கிற இரண்டு அரண்மனை இராக்காவற்காரரிடம் சில சொல்லப் போகிறேன். அது முடிந்த பிறகு இனி இங்கு நடக்க வேண்டிய வேலைகள் உன் பொறுப்பு - மிக மறை வாக நடக்கவேண்டும். வெளிக்கு ஒன்றுமே தெரியக் கூடாது. நினைவிருக்கட்டும். யாருக்கும் தெரியக் கூடாது. " . . . . * . - (இராக் காவற்காரர்கள் வருகின்றனர்) களம்-11 (ஆன்ழெல்லோ - திஸ்ப்-இராக் காவற்க்ாரர்கள் இருவர்) - - ஆன்றெல் : (இராக் காவற்காரரைப் பார்த்து) இரவுக் காவற்காரர்கள் நீங்கள்தானே? சரி! நம் அரண்மனை யின் கல்லறை எங்கே இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமல்லவா?