பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாள் அவதாரம் 71. இவற்றின் அழகினை வந்து கண்டு அநுபவியுங்கள்' என் கின்றாள், அழகு என்பது ஒரு தத்துவம். உலகில் அழகுக்கு ஒரு வரையறை காண்பது, அவ்வடிவத்தைப் படைப்பவரின் தொழிற் குறைவினாலேயன்றி, அழகென்னும் பொரு ளுக்கோ எல்லை இல்லை என்று சித்தாந்தம் செய்து காட் டுவன் கம்பநாடன் சூர்ப்பனகையின் வாய்மொழியாக." இந்த அழகு காதலர்களை ஒருவர்பால் மற்றொருவரை ஈர்க்கும் பெற்றியது என்பதை நாம் அறிவோம். பக்தர் களை இவ்வழகு ஈடுபடுத்தும் பாடு சொல்லுந்தரமன்று. அழகிய மணவாளனின் ஒவ்வோர் உறுப்பின் அழகிலும் ஈடுபட்டுப் பேசும் திருப்பாணாழ்வார், - - அண்டர்கோன் அணியரங் கன்னன் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் கானாவே." . என்று முத்தாய்ப்பாகக் கூறுவர். சூடிக்கொடுத்த சுடர்க் கொடி அழகிய மணவாளனை, என் அரங்கத்து இன்ன முதர், குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர், கொப் பூழில், எழுகமலப் பூ அழகர்' என்று பேசி அவன் அழகில் ஆழங்கால் படுவர். - நம்மாழ்வார் திருமாலிருஞ் சோலைமலை அழகரின் திருமேனி அழகில் ஈடுபட்ட திறம் தனிச்சிறப்பு வாய்ந்தது. கற்பகத்தரு கப்பும் கிளையுமாகப் பணைத்துப் பூத்தாற் போலே நிற்கின்றான் எம்பெருமான். அவனது அழகு வெள்ளம் அலைமோதி ஆழ்வார்மீது பாய்கின்றது. எம்பெருமானை நோக்கி வினவுகின்றார், - 6. ஆரணி. சூர்ப்ப.60 7. அமலனாதி. 10, 8. நாச், திரு, 11:2.