பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் பிள்ளைப் பெருமாள் உண்மையிலேயே இந்தியாவின் செல்வக்களஞ்சியம். இவ்வுலகின் கலி தீர்த்து ஏற்றம் புரிய வந்த பிள்ளைக் கனியமுது. அன்று அசோதைமுன் ஆடிவருந் தேனாக இருந்தான். அவளுக்குமுன் ஒடி. வருங்கால் அவள் உள்ளம் குளிருவதாகவும், அவனை ஊரார் மெச்சிப் புகழும்போதெல்லாம் மேனிசிலிர்ப் பதாகவும் இருந்தது. அவனுடைய முல்லைச் சிரிப்பே பலரது மூர்க்கத்தைத் தவிர்க்கும்; அவனைத் தழுவும் போது தழுவுபவர் உன்மத்தராவர். அன்பு தருவதில் அவனுக்கு நேர் அவனே. இப்படிப் பல்வேறு விதமாக, அசோதைக்கு இன்பந் தந்து வந்தவன் பிள்ளைப்பெருமாள். இவனது வளர்ச்சி நிலைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை அநுபவித்து மகிழ்ந்தவள் யசோதைப் பிராட்டி. இவற்றைப் பெரியாழ்வார் யசோதை நிலையில் நின்று அநுபவிப்பதை நாமும் அதுசந்தித்து மகிழ்வோம். தொட்டில் பருவம்: குழந்தையைத் தொட்டிலில் கிடத்தி.சில சமயம் துரளியிலும் போட்டு.தாலாட்டின படியை அவளைப் போலவே ஆழ்வார் தாமும் அநுபவித்துப் பேசுகின்றார். எம்பெருமான் எந்த இடத்தில் எந்தத் திருமேனியோடு அவதரித்தாலும் பிரமன் சிவன் இந்திரன் முதலான தேவர்களும் தங்களாலியன்ற அளவு கைங்கரியம் செய்து மகிழ்வர். இங்குக் கண்ணனைத் தொட்டிலில்