பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 79 யுடையவனான இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம போக்கியமாக அநுசந்தித்து ஓடிவா. நீண்ட நேரமாகக் கைநீட்டி உன்னை அழைக்கும் இந்தக் குழந்தை யின் கை நோவுபடும் அபசாரத்தைச் செய்யற்க என் கின்றாள் (3). இன்னும், என் மகன் சக்கரக் கையன் இடுப்பில் இருந்து கொண்டு மலர்விழித்து உன்னையே காட்டு கின்றான். கபடம் செய்யாமல் வந்தருள்க’ என்கின்றாள் (4). சந்திரா, இக்குழந்தையின் அமுதுாறும் மழலைச் சொல் நின் காதில் விழவில்லையா? நீ செவிடனா? நீகாது கேளாதாரைப்போல் போய்விட்டால் நீ செவிபடைத்த பயனை இழந்தவனாவாய்' என்கின்றாள் (5), இவன் இப்போது கொட்டாவி விடத் தொடங்குகின்றான். இனி உறங்கிவிடுவான். உறங்காவிடில் உண்ட முலைப்பால் செரிமானம் ஆகாது. ஆதலால் இவன் உறங்கிப் போவதற்கு முன் வந்து சேர்க' என்று அழைக்கின்றாள் (6). என்ன பேசியும் அசையாத அம்புலியை அச்சுறுத்தத் தொடங்குகின்றாள் அசோதைப் பிராட்டி, பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொருநாள் ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்; மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல், மாலை மதியாதே மாமதீ! மகிழ்ந்து ஓடிவா, (7) |பாலகன்.சிறுபயல்; பரிபவம்-தவிர்த்தல்; சிறுக்கன். சிறுபிள்ளை. வெகுளும் ஏல்-சீறினால்; மாலை. மகாபுருஷன்.) என்பது பாசுரம். இதில், சந்திரா, ஒயாமல் உன்னை அழைக்கச் செய்தும், இவன் ஒரு சிறுபிள்ளைதானே'