பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விட்டு சித்தன் விரித்த தமிழ் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அப்பனே அப்பூச்சி காட்டுகின்றான் (5) சே.எருதுகள்; பூண்டகட்டுதற்கு உரிய; சாடு-சகடம்; சிதறி.உருக்குலையும்படி, ஆப்பூண்டு.உடைமைக்கு உரியவர் கையில் அகப்பட்டுக் கொண்டு; கடை தாம்பு-கடையும் கயிறு : என்பது பாசுரம். களவு கண்டது உண்டாகில் கையும் பிடியுமாய்ப் பிடித்துக் கொணருங்கள் என்று சொல்லிய தாய் தன் முன்பே ஆய்ச்சிமார் கண்ணனைக் கண்டு பிடித்துக் கொணர, அது கண்ட யசோதை நான் பிள்ளையை வளர்ப்பது மிகவும் அழகிது!’ என்று சொல்லித் தன்னைத் தானே மோதிக் கொண்டு அவர்கள் முன்னே தன் வயிற்றெரிச்சல் எல்லாம் தோன்றும்படி அடிக்க, அடி உண்டவனாகிய கண்ணன் அப்பூச்சி காட்டுவதை நினைந்து மகிழ்கின்றார் ஆழ்வார். - அம்மம் உண்ண அழைத்தல் : பிள்ளைப் பெருமாள் (கண்ணன்) பகல் முழுவதும் விளையாடி இளைத்துப் பொழுது போனதையும் முலையுண்பதையும் மறந்து உறங்கிப் போய் விடுகின்றான். மறுநாள் விடிந்து நெடும் போதாகியும் கண் விழியாதிருக்கின்றான், யசோதைப் பிராட்டி அவனைத் துயில் எழுப்பி அம்மம் உண்ணாமையை (முலையுண்ணாமையை) அவனுக்கு அறிவித்து முலை யுண்ணும்படி வற்புறுத்துகின்றாள். ஊட்டவும் செய் கின்றாள். இந்நிகழ்ச்சியைத் தாமும் அநுபவிக்க விரும்பிய ஆழ்வார் தம்மை அப்பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு அவனை அம்மம் உண்ண எழுப்புதல் முதலியவற்றைப் பேசி இனியராகின்றார் இத்திருமொழியில் (22). அரவணையாய்! ஆயரேறே! அம்மம்.உண்ணத் துயிலெழாயே இரவும்.உண்ணா துறங்கிப்போய் இன்றும்உச்சி கொண்டதாலோ