பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை பெருமாளின் வளர்ச்சி நிலைகள் # 03 சிற்றில் சிதைத்தல், சிறுபறை, சிறுதேர் - என்று பத்து நிலைகளும்; பெண்பாற் பிள்ளைப் பாட்டில் இறுதியில் கூறப் பெற்ற மூன்றுக்குப் பதிலாக அம்மானை, நீராடல், ஊசல் என்ற மூன்று நிலைகளும் அமையும், பெரியாழ் வார் திருமொழியில் 1.4 முதல் 2.8 முடியவுள்ள பிள்ளைத் தமிழ்க் கூறுகள் விளக்கமாகவுள்ளன. இவற்றுள் சிறுபறை, சிறுதேர் என்ற இரண்டு நிலைகள் காட்டப் பெறவில்லை. ஆயினும் காப்பு முதல் எல்லாமும் அச்சோவச்சோ, புறம் புல்குதல், அப்பூச்சி காட்டுதல், அம்மம் உண்ண அழைத்தல், நீராட்டம், குழல் வாராய் அக்காக்காய், ஓர் கோல் கொண்டு வா, பூச்சூட்டல், காப்பிடல் என்ற நிலைகளும் காணப் பெறுகின்றன. இவற்றிலிருந்தே பிள்ளைத்தமிழ் அமைப்பு வளர்ந்தது என்று உறுதியாகக் கொள்ளலாம்.