பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் குழந்தைகளின் மழலை மொழி பெற்றோருக்கு இன்பம் தருதல் போல அவர்கள் செய்யும் சிறு குறும்புகளும் இன்பந் தரும். நம் சிறுவர்கள் செய்யும் சிறு குறும்புகள் பெற்றோருக்கும் மற்றோருக்கும் சிறிது அருவருப்பை விளைவித்தாலும் கண்ணன் செய்த சிறு குறும்புகளை யசோதைப் பிராட்டி அநுபவித்து மகிழ்கின்றாள். இந்தப் பிராட்டி பெற்ற அதுபவத்தைப் பெரியாழ்வார் தம்மை யசோதையாகப் பாவித்துக் கொண்டு அவற்றை அநுபவித்து இனியராகின்றார். அவற்றுள் சிலவற்றில் நாமும் ஆழங் கால்பட்டு அநுபவிப்போம். யசோதைப் பிராட்டி (பெரியாழ்வார்) சந்திரனை நோக்கிப் பேசுகின்றாள்: - தன்முகத்துச்சுட்டித் துரங்கத் துணங்கத் தவழ்ந்துபோய் பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன் கோவிந்தன். (1.5:1) |சுட்டி.நெற்றியில் தொங்கும் அணி; துரங்கத்துங்க. பலகாலும் அசைய; பொன்முகம்.அழகிய முகம்; கிண்கிணி.சதங்கை, ஆர்ப்பு-ஒலிப்பர குழந்தையாகிய கண்ணன் புழுதியில் புரண்டு விளையாடு வதில் யசோதையின் நாட்டம் செல் லுகின்றது. இந்த