பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் 109. முறையிட்டுக் கொள்ள வந்து அருகே நிற்பவள், நீ இப்படி இவனைப் புகழ்ந்து அழைக்கலாமா? அச்சுறுத்தி யன்றோ அழைக்க வேண்டும்?’ என்று சொல்ல, யசோதைப் பிராட்டி அதற்கு, இவன் எனக்குச் செல்வப்பிள்ளையாயிற்றே! என்று கூறிவிட்டுக் கண்ணனை நோக்கி அஞ்சன வண்ணா, உன்னைப் பிறர் பழித்துச் சொன்னால் என்னால் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கமுடியாது. ஆகவே அயலகத்தார் ஒன்றும் சொல்ல இடம் இல்லாதபடி நீ இங்கே வந்து சேர்க’ என்று அழைக்கின்றாள். இந்தக் காட்சியில் ஈடுபட்ட ஆழ்வார், வருக வருக வருக இங்கே வாமன கம்பீ! வருக இங்கே கரிய குழல்செய்ய வாய்மு கத்துக் காகுத்த நம்பி! வருக இங்கே அரியன் இவனெனக் கின்று, கங்காய் அஞ்சன வண்ணா! அசல கத்தார் பரிபவம் பேசத் தரிக்க கில்லேன்; பாவியே னுக்கிங்கே போத ராயே. (2.9:2) (கரியகுழல்.கருநிறமான கூந்தல்; அரியன்-அருமை யானவன்; அஞ்சனம்மை; பரிபவம்.அவமானம்; தரிக்க-பொறுக்க; பாவியேனுக்கு-பாபத்தைப் பண்ணின எனக்கு; போதராய். வாராய்! என்று அநுசந்தித்து மகிழ்கின்றார். இன்னும், கண்ணனைப் பலபடியாகப் புகழ்ந்து *கண்ணா! முலையுண்ண வா’ என்று அழைக்க, அவன் தன் மகிழ்ச்சி தோற்ற யான் அம்மம் உண்டு வந்தேன் காண்!" என்று ஓடிவந்து இல்லத்தினுள் புகுகின்றான். யசோதை அவன் வந்த அழகையும் முகமலர்ச்சியையும் கண்டு மகிழ்ந்து அக்கண்ணபிரானை எதிர் கொண்டு. சென்று அவனைத் தன் இடுப்பிலேற்றி அணைத்துக் கொள்கின்றாள். அண்ணன் முன்பு செய்த தீம்புகளை