பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் 115 பானையைத் தந்தான்; அதனால் நீர் அதிகமாயிற்று; நான் என்ன செய்வேன்?" என்று கூறி நழுவினான். பின்னர் அரசன் குயவனுக்கு ஆள் அனுப்பி வர வழைத்து விசாரிக்க அவனும், "என்னால் வந்ததன்று; நான் பானையைச் சிறிதாகவே செய்ய நினைத்தேன்; அதனைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு வேசி போக வரத் திரிந்தாள்; என் கவனம் கலைந்தது. அவளைப் பார்க்கின்ற பராக்கிலே பானை பெருத்து விட்டது. நானென்ன செய்வேன்? என்று மறுமொழி கூற, பிறகு தாசியை அழைத்து விசாரிக்கும்போது, அவளும் என் னால் வந்ததன்று; வண்ணான் என் சேலையை விரைவில் தராமையாலே நான் போக வரத் திரிந்தேன் எனப் பதில் கூறிவிட்டாள். பின்னர் வண்ணான் அழைத்து விசாரிக்கப் பெற்றான். அவனும், அரசே, நான் இதற்குப் பொறுப் பல்லேன், துணி துவைக்கும் துறையிலே கல்லின் மீது ஓர் அமணன் (திகம்பரசாமி) உட்கார்ந்திருந்தான். எவ்வளவு உரப்பியும் அவன் எழுந்து செல்லவில்லை; பிறகு அவனாகவே எழுந்து சென்ற பிறகு சேலையைத் துவைத் துத் தர வேண்டியதாயிற்று. நான் என்ன செய்வேன்? அந்த அமணனே தாமதத்திற்குக் காரணன் ஆவான்' என்று பதிலிறுத்தான். பின்னர் அந்த அமணனைத் தேடிப் பிடித்துக் கொணர்ந்து, நீயன்றோ இத்தனையும் செய்தாய்: நீ தான் பழி கொடுக்க வேண்டும். என்று அரசன் கட்டளை யிட, அவன் மெளனியாகையாலே ஒன்றும் விடை கூறா திருந்தான். மூட அரசன் உண்மையில் பழி தன்னிடத்தி லுள்ளதனால்தான் இவன் வாய் திறந்திலன்; இவனே குற்றவாளி' என்று தீர்மானித்து அவன் தலையை அரியக் கட்டளையிட்டான். அமணன் குற்றம் செய்யாதிருக்கவும் பழி அவன் தலையிலே ஏறினாப்போலே கண்ணன் தீம்பு செய்யா