பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. 22. 23. xiii தூயபெரும் தொண்டுகளால் துறையூர் இன்று சுடர்காரைக் குடிவேங்க டம் சீர்ச் சென்னை ஆயபல ஊர்களையும் சிறக்கச் செய்தார் அங்கெல்லாம் என்றுமிவர் புகழ்ம ணக்கும். அறிவியலில் தேர்ந்திருப்பார் சிலபேர்; என்றும் ஆழ்ந்திருப்பார் இலக்கியத்தில் சிலபேர்; ஆனால் அறிவியலும் இலக்கியமும் ஒருங்கே வல்லார் அருமையிலும் அருமை:இவர் அதற்கோர் - சான்று! அறிவியலில் பதினான்கு புதுநூல் செய்தார்; அவ்வளவில் இலக்கியங்கள் படைத்த வித்தார்; அறிவியலின் பார்வையினால் ஆக்கித் தந்த ஆராய்ச்சி நூல்களும் அவ் வளவி ருக்கும். மாசில்லாச் சமயநிலை விளக்கும் நூல்கள் வரிசையிலோர் பதினேழு படைத்த ளித்தார்; தேசுடைய சான்றோர்தம் வாழ்க்கை தன்னைத் தெரிக்கின்ற பனுவல்களோ முந்நான் காகும்; ஆசிரியப் பணியாற்றி அறிந்த வெல்லாம். ஐந்தரிய நூலாகத் தந்தார் மண்மேல்; ஆசிரியப் பணியிருக்கும் வரையி ருக்கும் அவர் படைத்த தமிழ்பயிற்று முறை” யின் - சீர்த்தி! கடலனைய பெருவாழ்வின் பரப்பை எல்லாம் கடந்துவந்த பட்டறிவு: சொல்லச் சொன்னால் மடைதிறந்த வெள்ளம்போல் பெருக்கெடுக்கும்; மாணிக்கம் வைரமெலாம் வந்து வீழும்! கெடலரிய தம்வாழ்வில் நிகழ்ந்த எல்லாம் கிளர்ச்சிதரும் பல நினைவுக் குமிழி யாக விடலரிய விருப்பினொடு சுவைப்ப தற்கு விரிவாக எழுதியுள்ளார் வெளியி டற்கே.