பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணனின் திரச் செயல்கள் 12? போது பேய் மகளாகிய பூதனையை ஏவினான் என்பது அக் காலத்தில் உலகறிந்த செய்தி. கஞ்சன் கறுக்கொண்டு கின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப்ப தற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு (2.8:6.}. இந்தப் பூதனை அழகான ஆய்ச்சி உருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து ஆங்கு உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக் கண்ணனை எடுத்து தன் நஞ்சு தீற்றிய முலையைப் பாலுண்ணக் கொடுத்துக் கொல்ல முயல, குழந்தைக் கண்ணன் அவ்வரக்கியின் முலையைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணும் பாவனையில் அவள் உயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும் படி செய்தருளினான். இதனை, கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலைஉயிர் துள்ளச் சுவைத்தானால் (2.10:6) என்ற பாசுரத்தால் அறியலாம். இவனைப் பேயின் முலை உண்ட பிள்ளை இவன் (2.5:2) என்றும், பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க வல்லான் (4.1:6) என்றும் குறிப்பிடுவர். இந்நிகழ்ச்சியை பல பாகரங்களில்: குறிப்பிடுவர் ஆழ்வார். 2. சகடாசுரன் வரலாறு : திருவாய்ப்பாடியில் தந்த கோபன் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்தில் 1. பெரியாழ். திரு : 1.2:5; 1.5:4; 2.3:1; 2.3:12; என்பன காண்க.