பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 127 கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் (2.7:6) என்றும் அநுசந்திக்கின்றார். 8. தேனுகன் வரலாறு : தேனுகன் என்பவன் ஓர் அசுரன். இவன் கம்சனின் ஏவலால் கழுதை வடிவங் கொண்டு காட்டுக்குள்ளே கண்ணனை நலிவதாக வந்தவன். ஒரு நாள் கண்ணபிரான் பலராமனோடும் வேறு சில ஆயர் சிறுவர்களோடும் ஆநிரை மேய்த்துக் கொண்டு கனிகள் கவினுறும்படி மிகுதியாகப் பழுத்து மணம் பரப்பிக் கொண்டிருந்த ஒரு பணஞ்சோலையை அடைந்தனர். பனம் பழங்களை விரும்பி உதிர்க்கத் தொடங்கினர். அப்பொழுது அச்சோலைக்குத் தலைவனும் கம்சனின் பரிவாரத்தில் ஒருவனுமான தேனுகன் சினங் கொண்டு கழுதை வடிவத்துடன் எதிர்த்துப் போர் செய்தான். கண்ணன் உடனே மிக எளிதாக அவனுடை பின்னங் கால்கள் இரண்டையும் பற்றி அவ்வசுரக் கழுதை யைச் சுழற்றி உயிர்செகும்படி ஒரு பனைமரத்தின்மீது வீசியெறிந்து அவனை அழித்தனன். இந்நிகழ்ச்சியை, தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி தான் எறிக் திட்ட தடம்பெருங் தோளினால் வானவர் கோன்விட வந்த மழைதடுத்து ஆனிரை காத்தான் (2.10:4) என்று ஆழ்வார் அதுசந்தித்து அகம் மகிழ்கின்றார்; இதில் இந்திரன் பசிக் கோபத்தினால் ஏவிய கல்மாரி தடுத்து ஆனிரைகளைக் காத்த வரலாறும் கலந்துள்ளது. இந் நிகழ்ச்சி பிலம்பன் காளியன் வரலாற்றுடன் இன்னொரு பாசுரத்திலும் (3.6:4) அநுசந்திக்கப்படுகின்றது. 9. பிரலம்பாசுரனைப் பிணமாக்கியது : பிரலம்பன் என் பவன் ஒர் அசுரன். ஓர் ஆயர் சிறுவன் வடிவங் கொண்டு கிருஷ்ணன்,பலராமன் ஏனைய ஆயர் சிறுவர்களுடன் விளை

    • *