பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$23 விட்டு சித்தன் விரித்த தமிழ் பாடிக்கொண்டிருந்தான், ஒரு வித பந்தாட்டத்தில் தோற்ற வர்கள் வென்றவர்களைச் சுமந்து கொண்டு ஆனிரைகள் பிரிந்து சிதறிப் போகாமல் அவற்றை வலப்புறமாகச் சென்று மடக்கவேண்டும் என்பதும் அங்ங்னம் செல்லுங் கால் தாம் அமைத்துள்ள குறிகளைத் தொட்டுத் தாம் இருந்த இடத்திற்கே வந்து சேரவேண்டும் என்பதும் நிபந்தனைகள். இதில் பலராமனைப் பிரலம்பன் சுமந்து செல்லும் வாய்ப்பு வந்தது. அங்ங்னம் சுமந்து செல்லுங் கால் பிரலம்பன் தீய எண்ணத்தனாய்க் குறிகளைத் தாண்டிப் போனான், பலராமன் தன் ஆற்றல் சிறப்பி ன ஒன் அவனுக்கு அதிகப் பாரமானான். உடனே பிரலம்பன் தன் உண்மையான அரக்க உருவத்துடன் வான்வழிச் செல்லத் தொடங்கினான். பலராமன் மடக்கிய தன் கையினால் அசுரன் தலையில் ஓங்கிக் குத்த, அசுரன் தலை பிளந்து உடலெங்கும் செந்நீர் பெருகக் கதறிக் கொண்டு பூமியில் விழுந்து உயிர் ஒழிந்தனன். இந் நிகழ்ச்சியினையும், மேற்குறிப்பிட்ட தேனுகன் நிகழ்ச்சி: யினையும் காளியன் நிகழ்ச்சியோடு ஒரு சேரத் தொகுத்து, தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக் கான கம்படி உலாவி உலாவிக் கருஞ்சிறுக் கன்குழல் ஊதினபோது (3.6:4} (பிலம்பன் - பிரலம்பன், தீப்பூடுகள் - கொடிய பூடுகள்; உழக்கி - அழித்து; கானகம்படி - காட்டுக்குள்ளே; கருஞ்சிறுக்கன் - கரிய சிறு திருமேனியையுடைய பிள்ளையாகிய கண்ணன்) என்ற பாசுரத்தில் அநுசந்திக்கின்றார் பெரியாழ்வார். இங்ங்ணம் பலராமனால் செய்யப் பெற்ற அசுரவதத்தைக் கண்ணன் செய்தருளினதாக அநுசந்திப்பது ஒற்றுமை நயம் பற்றியதாகும். இதையே இன்னொரு பாசுரத்திலும் அதுசந்திக்கின்றார். ...