பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச்செயல்கள் 133. கன்றினம் மேய்த்துக் கணிக்கொரு கன்றினை பற்றி எறிந்த பரமன் (2.5:5). (கன்று இனம்.கன்றுகளின் கூட்டம்; பரமன்.பரம புருடன் 1 - என்றும், விரும்பாக் கன்றொன்று கொண்டு. விளங்கனி விழ எறிந்த பிரானே! (3.1:6) (விரும்பா.விரும்பாமல்) என்றும் ஆழங்கால்பட்டு அநுபவிக்கின்றார். திருமங்கை யாழ்வார் இந்நிகழ்ச்சியினை, கன்று.அதனால் விளவுஎறிந்து கணிஉதிர்த்த காளை! (3.10:8). என்று சொல்லித் தன்னை மறப்பர். யசோதைப் பிராட்டி கண்ணனைக் கன்றுகளை மட்டிலும் மேய்த்து வருமாறு ஏனைய இடைச் சிறுவர்களுடன் அனுப்பிவைப்பாள். பெரிய மாடுகளை மேய்க்க அனுப்புவதில்லை. கன்றுகளின் மீது கண்ணன் மிக அன்பாய் இருப்பான். ஒரு குறிப்பு: மலைமீதுள்ள காடுகளில் கண்ணன் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, இளங்கன்றுகள் அங்குள்ள தடாகங் களில் நீர் அருந்தப் போகும்போது நீரில் முன்னே இறங்கிக் குடிக்க அஞ்சும், அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழகுவிப்பதற்காகக் கண்ணன் தன் முதுகில் கைகளைக் கட்டிக் கொண்டு கவிழ்ந்து நின்று தண்ணிர முது செய்து காட்டுவன். இதைத்தான் திருமங்கை யாழ்வார் வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை (பெரி. திரு. 2.5:3) என்கின்றார் என்று பட்டர் அருளிச் செய்வார். சிலப்பதிகாரமும்,

  • கன்று குனிலாக்

கணிஉதிர்த்த மாயவன்' என்று இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடும். 4. சிலப். மதுரைக், ஆய்ச்சியர் குரவை-பாட்டு.1