பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I34 விட்டு சித்தன் விரித்த தமிழ் 14. மாதவத்தோன் புத்திரனை மீட்டுக் கொடுத்தது: பலராமனும் கண்ணனும் வேத அத்யயனம் செய்ய விரும்பி அவந்தி நகரம் சென்று அங்கிருந்த சாந்தியினி என்னும் பிராமனோத்தமர் பக்கல் எல்லா சாத்திரங்களையும் 64 நாட்களுக்குள் கற்றுக்கொண்டு விடைபெறுங் காலத்தில் குருதட்சணை சமர்ப்பிக்கத் தேடுகின்றனர் குருவை. அந்த ஆசாரியர் கண்ணனின் அதிமானுஷ்ய சேஷ்டித ஆற்றலை அறிந்தவராதலால், :பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு பிரபாச தீர்த்த கட்டத்தில் கடலில் மூழ்கி மரித்துப் போன என் மகனைக் கொண்டு வந்து தரவேண்டும்" என்று விருப்பத்தைத் தெரிவித்தார். கண்ணனும் அதற்கு இசைந்து அம் மகனைக் கொண்டுபோன சங்கின் உருவங்கொண்டு மாக்கடலில் வசிக்கும் பஞ்சஜகன் என்ற அசுரனே அவ்வந்தனச் சிறுவனைக் கொண்டுபோயினன் என்பதை வருணனால் அறிந்து, கடலில் இறங்கி அவ்வ சுரனைக் கொன்று அவன் உடலாகிய பாஞ்சசன்யத்தை எடுத்து வாயில் வைத்து முழங்கிக் கொண்டு யமபுரிக்கு எழுந்தருளி அங்கு யாதனையிற் கிடந்த அந்தச் சிறுவனை அவன் இறந்தபோது கொண்டிருந்த உருவம் மாறாதபடி கொண்டு வந்து தட்சணையாகக் கொடுத்தான். இந்த வரலாற்றை நினைந்து பெரியாழ்வார், - மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கோடுத்தான்! (4.8:1) (மாதவத்தோன்.சாந்தீபினி, ஒதுவித்த-வேத அத்ய ய ன ம் பண்ணுவித்த உருஉருவே-மாறாத உருவுடன்) - . 3. என்று அநுசந்திக்கின்றார். திருமங்கை யாழ்வாரும் இந் நிகழ்ச்சியில், " , - “’