பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#40 விட்டு சித்தன் விரித்த தமிழ் கூறுவர். இக்கதை முற்கூறிய புராண வரலாற்றோடு மாறுபடுவது மட்டுமன்றிச் சிந்தாமணிப் பாடலின் உள்ளீடான கருத்தைச் சிறிது மிகைப்படுத்திக் கூறுவது மாகும். ஆயினும், பலராமன் வருதலையறிந்து, கோபியரது மானம் காக்க வேண்டிக் கண்ணன் குருந்தொசித்துத் தன் செயலைத் தமையன் அறியாமல் செய்தான் என்ற அளவி அள்ள வரலாறு, தமிழ்நாட்டில் பழங்காலத்தில் வழங்கிய தென்றே சொல்லலாம். - இனி, அகநானூற்றில் மதுரை மருதனிள நாகனாரின் வாக்காகவுள்ள பாடலின் (59) பகுதியைக் காண்போம் அப்பகுதி: வடா அது, வண்புனற் றொழுகை வார்மணல் அகன்றுறை அண்ட மகளிர் தண்டலை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போலப் புன்றலை மடப்பிடி யுனிஇய ரங்குழை கெடுகிலை யாஅமொற்றி கணைகவுட் படிஞiமிறு கடியும் களிறே (4-9). (வடா அது . வடக்கின் கண்ணதாகிய, வண்புனல் . நீர்வளம் அறாத; தொழுநை - யமுநை; அண்டர் மகளிர் . ஆயர் மகளிர்; உடீஇயர் . உடுத்திக் கொள்ள, மரம் செல குருந்த மரம் வளைய; மாஅல் - கண்ணன்; புன்தலை . மெல்லிய தலை யையுடைய, மடப்பிடி - பெண் யானை ; அங் குழை - அழகிய தளிர்களை; உணி இயர் . உண் ணற்கு; யாஅம் ஒற்றி - யாமரத்தினை வளைத்துத் தந்து: கவுள் - கன்னம்: Dமிறு வண்டு; கடியும் . ஒட்டா நிற்கும்) இதில், வடதிசையின்கண் உள்ள யமுநை யாற்றின் துறையிலே நீராடி நின்ற கோபியர் தழையை உடுத்துத் தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ளற்பொருட்டு