பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 14懿 (குருந்த) மரத்தை வளைத்துக் கொடுத்த திருமாலைப் போல, களிறு தன் பெண் யானை உண்ணும்படி யாமரத்தை வளைத்துக் கொடுத்துத் தன் கன்னத்து மத நீரில் படியும் வண்டுகளைக் கடியா நிற்கும், கணவர் சென்ற வழியின்கண்; அவர் இது கண்டு திரும்புவர்" என்று - தலைவனது பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி கூறியதாக அப்புலவர் பாடுதலால் அறியலாம். இவ்வடிகளுள் அண்டர் மகளிர் தண்டலை உடீஇயர் - மரச்செல மிதித்த மாஅல் என்றதன் வரலாற்றுப் பகுதி அகநானூற்றின் பழைய உரைகாரர் எழுதியுள்ள செய்தி: ஆயர் பெண்கள் குளியா நின்றார்களாக அவர் இட்டு வைத்த துகில்லல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு (கண்ணன்) குருந்த மரத்து ஏறினானாக, அவ்வளவில் நம்பி மூத்தபிரான் (பலராமன்) வந்தராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைதற்கு மற்றொரு வழியின்மையின் ஏறி நின்ற குருந்த மரத்துக் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தான். அதற்குள்ளே அடங்கி ம ைற வாராக, அவர் போமளவும் தானையாக உடுக்கத் தாழ்த்தார் என்பாரு முளர். ஒற்றி . வளைத்து' என்று வருதல் காண்க. இதனால், கோவியர் துகில்களைக் கண்ணன் கவர்ந்த பின் எதிர் வந்த பலதேவன் கானாவகை அம் மகளிர் ஒருங்கு மறையும்படி அவன் குருந்த மரக் கொம்பை வளைத்துக் கொடுத்தான் என்பதே சங்க காலத்து வழங்கிய சரிதமாதல் தெரியலாம். இங்கனமே சிவப்பதி காரம், சிந்தாமணியில் வரும் தொடர்களும் இக் கதை யையே கொள்ளும்படி பொருள் கோடல் வேண்டும். 18. கோவர்த்தனத்தைக் குடையாக எடுத்தது: கண்ண னுடைய அதிமானுஷ்ய சேஷ்டிதங்களைக் கண்டு. ஆயர்கள் அனைவரும் இவனே நம் குலக்கொழுந்து.