பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 விட்டு சித்தன் விரித்த தமிழ் (மன்னர்.குருநாட்டு அரசர்கள்; மறுக-குடல் குழம்பும் படி; மைத்துனன்மார்.பாண்டவர்கள்; முன் அங்கு நின்று.முன்புறத்திலே நின்று கொண்டு; மோழை-குமிழ்.) என்ற பாசுரத்தில் கண்டு மகிழலாம். 27. மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்தது: மைத்துனன் மார்காதலி, திரெளபதி. ப எண் டவ ர் மனைவியாகிய திரெளபதி வீட்டுக்கு விலக்காக இருக்கும் போது தீமையில் அண்ணனையும் வென்ன துச்சாதனன்' அவளைச் சபையில் மானபங்கம் செய்ய மயிரைப் பிடித்திழுத்ததற்கு அவன் மீதும், இதற்குத் துணையாக இருந்த துரியோதனன் மீதும் கறுக்கொண்டு இவர்களை உயிர்மாளவித்ததன்றி நான் இவ்விரித்த கூந்தலை முடிப்ப தில்லை என்று சபதம் பண்ணிக்கொண்டு பன்னிரண்டு ஆண்டு காட்டில் திரித்த காலத்தோடும் பின்னர் நாட்டிற் சேர்ந்த காலத்தோடும் வேற்றுமையின்றி விரித்த தலையும் தானுமாகத் திரிகின்ற படியைக் கண்ட கண்ணபிரான் :நாம் இவள் சங்கற்பத்தின்படியே செயலாற்றி இவளது கூந்தலை முடிப்பித்தாலன்றோ சரணாகத ரட்சகன்’ என்று நாம் கொண்டுள்ள விருது பிழைகும் என்றெண்ணி அவ் வண்ணமே செய்யக் கருதித் தூது நடந்தும் தேரூர்ந்தும் பாண்டவர்க்குத் துணை செய்து அவளது சங்கற்பத்தை ஈடேற்றிக் கூந்தலை முடிப்பித்து அப்பாண்டவர்களையும் அரசாளவித்தான். இந்த நிகழ்ச்சியை ஆழ்வார், மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களை மன்னராக்கி (4.9:6) என்ற பாசுரத்தில் அநுசந்திக்கின்றார். இந்த நிகழ்ச்சி, ‘அர்ச்சுனக்கு துரத்யசாரத்தியங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக” 9. பூரீவச. பூஷ. 28. (புருடோத்தம நாயுடு பதிப்பு. )