பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.பிருந்தாவனத்தில் வேணுகோபாலன் 169 அவசரத்தில் குலைந்த கூந் தலைக் கட்டிக் கொள்ளவும் தோன்றவில்லை; குலைந்த ஆடையை ஒரு கையால் பற்றிக் கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர். கண்களோ நாணத்தைக் கடந்து அந்த அழகிய கண்ணன் வடிவத்தின்மேல் ஒடு கின்றன! என்ன இனிய இசை என்ன தத்துவ உண்மை! கோபாலன் பசுக்களைத் தேடுகின்றான்: பரமான்மா சீவான்மாக்களைத் தேடுகின்றது- என்பது ஆழ்வார் பெற வைக்கும் குறிப்பு. இது மற்றோர் காட்சி. மேலும் சில காட்சிகளைக் காண்போம். கண்ணன் குழலோசை உம்பர் உலகையும் எட்டுகின்றது. அங்குள்ள இளமங்கையர் தங்களிருப்பிடத்தில் நிற்க மாட்டாமல் கண்ணன் இருக்குமிடத்தில் கூட்டம் கூட்டமாக வந்து கூடுகின்றனர். அவர்கள் மனம் நீர்ப்பண்டமாக உருகு கின்றது. கண்களினின்றும் ஆனந்தக் கண்ணிர்த் துளிகள் சொட்டுகின்றன; கூந்தல்கள் அவிழ்கின்றன; நெற்றி வியர்க்கின்றது. தங்கள் காதுகளைக் குழலோசை வரும் பக்கம் திருப்பிக் கொண்டு மயங்கிக் கிடக்கின்றனர் (3.6:3). இது பிறிதோர் காட்சி, காட்டுக்குள்ளே இயல்பாக உலாவிக் கொண்டு கண்ணன் எழுப்பும் புல்லாங் குழலோசை மேனகை, திலோத்தமை, அரம்பை, ஊர்வசி ஆகிய உம்பர் உலக நடனமாதர்களின் செவிக்கும் எட்டுகின்றது. அவர்களின் நடையழகும் பாட்டழகும் கண்ணனின் நடையழகு குழலோசை இவற்றின் முன் தோற்றுப் போகவே, இனி நாம் ஆடுவதாவது, பாடுவதாவது?" என்று நானங் கொண்டு தாமாகவே அத்தொழில்களைத் துறக்கின்றனர். மேனகை யோடு திலோத்தமை அரம்பை உருப்பசி யர் அவர் வெள்.கி மயங்கி வானகப் படியில் வாய்திறப் பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே (3.6:4)