பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 70 விட்டு சித்தன் விரித்த தமிழ் |வெள்.கி.நாணி; வானகப் படியில்-வானுலகிலும் பூவுலகிலும்; மாறினர்.விட்டொழித்தனர்.1 கானவித்தைக்குத் தும்புருவும் நாரதரும் பேர் பெற்ற வர்கள், அவர்களும் கண்ணனின் குழலோசையைக் கேட்டதும் அதில் ஈடுபட்டுத் தமது வீணைகளை மறக் கின்றனர். கின்னர மிதுனங்கள் என்று புகழ் வாய்ந்த பேர்களும் இக்குழலோசையைக் கேட்டதும், தாம் தோற்றதாகக் கொண்டு, இனி நாங்கள் எங்கள் கின்னரந் தொடுவதில்லை; இது எங்கள் அப்பன் ஆணை’ என்று உறுதியாக உரைத் தொழிகின்றனர் (3.6:5). இதோ பாருங்கள் ஆகாய சஞ்சாரிகளும் கீதவாத்திய விநோதர் களுமான கந்தர்வர்கள் படும் பாட்டை! அம்பரம் திரியும் காந்தர்ப்ப ரெல்லாம் அமுத கீதவலை யால்சுருக் குண்டு கம்பரம் அன்றென்று நாணி மயங்கி - கைந்து சோர்ந்துகை மறித்துகின் றனரே! (3.6:6). (அம்பரம்-ஆகாயம்; கந்தர்ப்பர்.கந்தர்வர்; கை மறித்து..கையைத் திருப்பிக் கொண்டு.) பரம போக்கியமான கண்ணனின் குழலோசையாகின்ற வலையிலே கட்டுப்பட்டு விடுகின்றனர். அவர்கள் தம்முடைய கலைச் செருக்கெல்லாம் மறந்தொழிகின்றது. *இதுகாறும் நாமும் சிறிதும் வெட்கமின்றிப் பாடித் திரிந்தோமே!" என்று மனம் நைந்து, இனி இசைக் கருவி களையே கையினால் தீண்டோம் என்று சங்கற்பம் செய்து கொள்ளுகின்றனர் (3.6:6). இது வேறோர் காட்சி. கண்ணன் குழலோசையைக் கேட்ட தேவர்களும் அவர் களின் தேவியரும், செவியு னாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந் தென்றும் விடாரே!. என்று காட்டும் ஆழ்வார்,