பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i”.4 விட்டு சித்தன் விரித்த தமிழ் கின்றது. பரலோகத்தையும் இந்த இகலோகத்திலே கொண்டு வந்து விடுகின்றது; மறுமையிலுள்ள பேரின் பத் தையும் இம்மை இன்பமாகக் காட்டி விடுகின்றது. இந்த அற்புதத்தில் வேற்றுமைகள் யாவும் மறைந்தொழி கின்றன. வேற்றுமைகளிலும் ஒற்றுமையை உணர்த்தி விடுகின்றது' என்று விஷ்ணுசித்தர் உபதேசிப்பது நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்து விடுகின்றது. கண்ணன் தரிசனமளிக்கும் கோலங்களில் மூன்று பக்தர் கனின் உள்ளங்களைச் சிறப்பாகக் கவருகின்றன. ஆயர்பாடிச் சிறுவனாக வருவது ஒன்று; பசுக்களுக்கும் இடைப்பெண்களுக்கும் தோழனாகத் தோன்றுவது மற்றொன்று; வேணுகோபாலனாகத் தோற்றமளிப்பது பிறிதொன்று, இந்த மூன்று கோலங்களையும் பெரியாழ்வார் நேர்காட்சிகளாக அநுபவித்து மகிழ்பவர். ஆயினும் இசையுலகின் அதிசயமான தத்துவங்களோடு வேதாந்தத் தின் பெரிய பெரிய தத்துவங்களும், சரித்திர முடிவுகளான சித்தாந்தங்களோடு பல்வேறு கலைகளின் பொருளும், கவிஞர்களின் புதிய புதிய கனவுகளும், வேணுகோபாலனின் குழலிசையிலே, விதையில் அடங்கிய ஆலமரம் போல, அடங்கியுள்ளன என்பது &দয়ে দুটো6ক্টর அடியார்களின் கொள்கையாக மலர்ந்துள்ளது என்று கருதலாமல்லவா?