பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அர்ச்சாவதார அநுபவம் அர்ச்சாவதாரம் என்பது அன்பர்கள் எதைத் தனக்குத் திருமேனியாகக் கொள்ளுகின்றனரோ அதனையே இறைவன் தனக்கு வடிவமாகக் கொண்ட நிலையாகும். இந்த அவதாரம் தொலைவினால் மனத்திற்கும் எட்டாத பரமபதம் திருப்பாற்கடல்கள் போன்றும், தற்போது சேர்ந்து இன்பந் துய்த்தற்கியலாத இராமகிருஷ்ண அவதாரங்கள் போன்றும் அல்லாமல் எப்போதும் நம் அருகில் நிலைபெற்றுக் கண்ணால் கண்டு களிப்பதற்கு இடந்தரும் இறைவனின் நிலையாகும். இதனை, பூகத ஜலம் போலே அந்தர் யாமித்வம்; ஆவரண ஜலம் போலே பரத்துவம்; பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே விபவம்; அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவ தாரம் - (பூகதம் - பூமிக்குள் இருக்கின்ற; ஆவரணம் - மூடிக் கொண்டிருப்பது) என்று பூரீவசன பூஷணம் விளக்கும். பகவான் நம் இதயத்திலேயே இருப்பினும், அவனைப் பற்ற வேண்டும் என்று விருப்பமுண்டாகில் அந்த இருப்பு (அந்தர்யாமித்துவம்) கட்புலனுக்குத் தோன்றாமையின் பயன்பட்டிலது; நீர்வேட்கையுற்றவன், மிகத் தொலைவு 1. பூர்வச. பூஷ. 42 (புருடோத்தமநாயுடு பதிப்பு).