பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 76 விட்டு சித்தன் விரித்த தமிழ் சென்று பருகாதவாறு தான் நிற்கும் நிலத்தின் அருகிலேயே நீர் இருப்பினும் அந்நீர் அவ்வமயம் பருகுவதற்குப் பயன் படாதது போன்றுள்ளது. வீலா விபூதியைக் கடந்து இருக்கும் பரமபதம் இவ்வண்டத்துக்குப் புறம்பே இருக்கும் ஆவரண நீர் போன்றுள்ளது. இவ்வண்டத்திலேயே இருக்கும் வியூகம் ஒருவராலும் காண முடியாத பாற்கடல் போன்றுள்ளது. அவ்வக் காலங்களில் தோன்றி மறையும் அவதாரங்கள் (விபவம்) அச் சமயத்தில் உள்ளவர்க். கல்லாமல், பிற்காலத்தவர்கட்குப் பயன்படாத பெருக்காறு போன்றுள்ளது. அர்ச்சாவதாரமோ, இவற்றைப் போன்றல் லாமல், கால தேசங்களின் வேறுபாடில்லாமல், சந்நிதி களிலும் இல்லங்களிலும் என்றும் ஒருபடித்தாய், யாவருடைய கண்களுக்கும் புலனாகுமாறு காட்சியளித்துக் கொண்டு, நீர்விடாய் கொண்டவன், அவ்விடாய் தணியு மாறு பருகுவதற்கேற்பப் பெருக்காற்றில் தேங்கிய மடுக்கள் போன்றுள்ளது. ஆதலின், இவற்றுள் அர்ச்சாவதாரமே: சேதநருக்கு நலம் அளிப்பது என்றாகின்றது. - செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம் என்று பேசும் முமுட்சுப் படியும். செளலப்பியம் என்பது எளியனாக இருக்கும் இருப்பு. இது கண்ணுக்கு விஷயமா காதிருக்கும் ஈசுவரன், தன் திவ்விய மங்கள விக்கிரகத்தை, சேதநன் தன் கண்களாலே பற்றுதற்கேற்ப எளியனாக இருத்தலாகும். - - எல்லா ஆழ்வார்களும் இந்த அர்ச்சாவதாரத்தில்தான் அதிகமாக ஈடுபட்டுப் பேசுவர். சுருங்கக் கூறினால், நாலாயிரத்தின் பாசுரங்கள் யாவும் இந்த அர்ச்சாவ தாரத்தைப் பற்றியனவேயாகும். இந்த அவதாரத்தை மங்களா சாசனம் செய்வதற்காகவே அவதரித்த திருமங்கை ஆழ்வார் நூற்றெட்டு திவ்விய தேசங்களில் வடக்கே 2. முமுட்சு . 139.