பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 விட்டு சித்தன் விரித்த தமிழ் இதில் நீராடுபவர்க்குத் திராத நோய்கள் எல்லாம் தீருவதாகவும் சொல்லுகின்றனர். திருமால் உலகளந்த காலத்தில் திரிவிக்கிரமனின் திருவடி சத்தியலோகத்தை எட்டினபொழுது நான்முகன் தன் கைக் கமண்டலத் தீர்த்தத்தால் கழுவி விளக்கியதாகவும், அந்த எம்பெரு மானின் காற்சிலம்பினின்று தோன்றியதனால் சிலம்யாறு: என்று பெயர் பெற்றதாகவும் புராண வரலாறு வழங்கி வருகின்றது. இவ்விடத்தில் திருக்கண்ணபுரம் சுவாமி என்ற ஒரு வைணவப் பெரியார் சிலம்பாறு’ என்பதற்கு சுவையாகப் பணித்த விளக்கமும் நம் நினைவிற்கு வருகின்றது. சிலம்பொலி ஞெகிழி குன்றாம்" என்ற சூளாமணி நிகண்டின் படி சிலம்பு’ என்ற சொல் குன்றினையும் குறிக்கும். கின்னர மகளிர் திருமாலிருஞ் சோலைத் தாழ்வரையில் வந்து தங்கி நம்மாழ்வாரது திருவாய் மொழிப் பாசுரங்களை இசையுடன் ஒதினதாகவும் மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவின ஆழ்வாரது பாசுரங்களைச் செவிமடுத்த குன்றும், உருகிப் பெருகாநிற்கும் என்றும், அங்ங்ணம் குன்றே உருகிப் பெருகினமையால் அது சிலம்பாறு' என்று பெயர் பெற்ற தாகவும் கூறுவர். பெரியாழ்வாரின், சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர்ச் சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே (4.2:1) என்ற பாசுரப் பகுதியே இப்பெரியாரை இங்ங்ணம் நினைக்கத் துரண்டியிருக்க வேண்டும். - - சிலம்பாறு' என்ற இந்த ஆறு திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரராசனின் திருவடிகளை வருடிக் கொண்டு பாய்ந்து பெருகி வயல்களை வளப்படுத்தும் காட்சி அநுபவிக்கத்தக்கது. நீரின் சுவை இனிமையாக