பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 விட்டு சித்தன் விரித்த தமிழ் சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழி யும் சிலம் பாறுஉடை மாலிருஞ் சோலை (நாச், திரு.9:10) (சந்து.சந்தனக் கட்டை, கார் அகில். அகிற்கட்டை; தடங்கள்.குளங்கள்; பொருது-அழித்து; இழியும். -பெருகும்) என்று குறிப்பிடுவதும் நம் எண்ணத்தில் முகிழ்த்து நம்மை மகிழ்விக்கின்றது. - o பொதுவாக ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் முதல் இரண்டு அடிகளில் எம்பெருமானின் பெருமையையும் இறுதி இரண்டு அடிகளில் திவ்வியதேசத்தின் வளங்களை யும் எடுத்துரைப்பது மரபாக இருந்து வருகின்றது. பெரி யாழ்வாரும் இந்த மரபை யொட்டியே திருமொழிகளை அமைக்கின்றார். முதலில் திருமாலிருஞ் சோலைபற்றிய முதல் திருமொழியை (4,2) நோக்குவோம். முதலில் திவ்விய தேசத்தின் வளங்களைக் காண்போம், தேவ மாதர்கள் தங்கள் பாதச் சிலம்புகள் ஒலிக்கும்படி அன்ன நடை நடந்து வந்து சோலைமலையின் நூபுர கங்கையில் நீராடுவர் (1). சோலைமலையில் எல்லா இடங்களிலும் மங்களாசாசன ஒலி பரவி நிற்கும் (2). எப்போதும் போய் எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் திருமாலடியார் களின் பாவக்காட்டு வழியை விலக்கும் (3). உம்பர் உலகில் கற்பகத்தருவின் பூங்கொத்தில் பெருகு தேன் சோலைமலையில் ஆறாக ஒடும் (4). ஊடல் கொண்டு பெண்யானை ஒடத்தொடங்க அது கண்ட ஆண்யானை வேறு உபாயங்களால் நிறுத்த முடியாமல், கடல் வண்ணன் மீது ஆணை என்று சொல்ல அப்பேடை அந்த ஆணைக்குக் கட்டுப்பட்டு ஓடுவதை நிறுத்திக் கொள்ளும் (5). நான் முகன் முதலிய தேவர்களும் சனகர் முதலிய முனிவர் களும் ஆபத்துக் காலத்தில் ஆணையாயிருக்குமென்று கருதி சேவித்துக் கொண்டு தங்கும் மலை (6). நான் மாடக்