பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 விட்டு சித்தன் விரித்த தமிழ் கண்டதில்லை; நின் திருவடி நிழலொழிய மற்றோர் உயிர்ப்பிடத்தை நான் வேறெங்கும் காண்கின்றேன் . இல்லை' (4). மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் ஆழங்கால் படவேண்டும் என்று நினைக்கும்போதே, காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும் (பெரிய, திருவந். 34) என்கின்றபடியே எல்லா இந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அந்த நிலையை இந்த ஆழ்வார் வைத்த அடியை எடுத்து வைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புவதில்லை; ஆனந்தக் கண்ணிர் இடைவிடாது பெருகு கின்றது; உடலும் கட்டழிந்து நடுங்கா நிற்கின்றபடியால் வாய் திறந்து பேச முடியவில்லை; மயிர்க் கூச்செறிதல் ஒய்கின்றதில்லை. உன்னைத் தோளால் அணைக்க முயன்றால் தோள்கள் இயங்க முடியாமல் வல்லமையற்றுச் சோர்வுடன் கிடக்கின்றன; நெஞ்சும் பிச்சேறிக் கிடக் கின்றது' என்று கூறுகின்றார் (5). உருத்திரன், நான்முகன், இந்திரன் மற்றுமுள்ள தேவர்கள் சம்சார மாகின்ற நோய்க்கு மருந்தறிய வல்லவரல்லர். உன்னை யொழிய வேறொருவருக்கும் பிறவி நோயின் மருந்தை அறிவதற்குரிய திறமை இல்லை; ஆதலால் நீயே அந்த நோயைப் போக்கி நின் கோயில் வாசலைக் காக்க வல்ல அடியவனாக அமைத்தருள வேண்டும் (6). சம்சாரம் என்ற ஆழங்கான முடியாத கடலில் நெடுநாள் அழுந்திக் கிடந்து வருந்தினேன்; பின்னர் நினது பேரருளினால் இக் கரை ஏறின அடியேனை மீண்டும் அக்கடலில் தள்ளாமல் அஞ்சேல் என்று அபயம் அளித்தல் வேண்டும்' (7). கணக்கிட முடியாத கால முழுவதும் சம்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டேன். அதில் நின்றும் விடுபட்டு ஞானம் பெற்ற இன்றுமுதல் உன்னைப் போக விடுதல் ஒல்லுமோ? என் நெஞ்சு நின் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை அறிகின்றாயன்றோ? (8). பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி, அழுதேன்; அரவணை மேற்கொண்டு தொழுதேன்’ (முதல் திருவந்.16) என்ற பொய்கையார் .