பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 விட்டு சித்தன் விரித்த தமிழ் நிற்பதும் கதிரையுடையதுமான செந்நெல் தாள்களை நீட்டித் தலைவணங்கி நிற்கப் பெற்ற இடம் (8). அன்னப் பேடை தன் கணவனான ஆண் அன்னத்துடன் செந் தாமரை மலரின்மீது ஏறி அம்மலரை அசைத்து ஊசலாடி ஒன்றோடொன்று புணருவதால் சுண்ணமாகிய சிவந்த பொடியில் மூழ்கி விளையாடும் நீர்வளத்தையுடைய இடம் (9), திருவாளன் திருக்கண்கள் வளரும் இடம் (10). இத்திவ்விய தேசத்தில் திருக்கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? சித்திரகூடத்தில் வந்து பிரபத்தி பண்ணின பரதாழ்வானுக்கு பாதுகைகளை ஈந்து, அதன் பிறகு போருக்கு உரிய செயல்களை முடித்துக் கொண்டு பிராட்டியுடன் அயோத்திக்கு எழுந்தருளி அரசோச்சியவன் (1). சேதநர் செய்த பிழைகளைக் கணக் கிட்டு அதற்குத் தக்கவாறு தண்டனை வழங்குவதற்காகக் சீற்றமுற்றிருக்கும் எம்பெருமானை எதிர்த்துச் சில பேச்சுக் களைப் பேசி மயக்கி அக்குற்றவாளிகளை வாழ்விக்கக் கடவளான பிராட்டி எம்பெருமானுடைய திருவுள்ளத்தைச் சோதிக்கக் கருதியோ வேறு ஏதேனும் ஒரு காரணம் கொண்டோ தம் அடியார் திறத்துச் சில குற்றங்களை எம்பெருமானிடத்துக் கூறுவாளாகில் அதனைக் கேட்டு எம்பெருமான் இப்படிப்பட்ட குற்றங்களை உன் அடியார் செய்யத் துணிவரேயன்றி என் அடியார் ஒருகாலும் செய்யமாட்டார்கள் என்பன்; அதற்குமேலும் பிராட்டி. கநீர் இங்ங்ணம் சொல்லலாகாது; அவர்கள் குற்றவாளிகள் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லையே' என்று வற்புறுத்திச் சொல்வில், அதற்கு எம்பெருமான் உன்னடியார் செய்யும் குற்றங்கள் உனக்குப் பொல்லாங்காகத் தோன்றினாலும், என்னடியார் செய்யும் குற்றங்கள் எனக்குக் குணமாகவே தோன்றக் கடவன; இனி நீ ஒன்றும் எதிர்த்துப் பேச வேண்டா என்று வெட்டொன்று துண்டிரண்டாகக் கூறுவன். இத்தகையவனும் வீடணற்காக இலங்கையை நோக்கித் தன் மலர்ந்த திருக்கண்களை வைத்தருளின