பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அதுபவம் 20.3% கொண்டெறிந்தும் உருட்டியருளியவன் (3); அசுரர்களும் அரக்கர்களும் இந்திரன் முதலிய தேவர்களை அமைதியாக இருக்க வொட்டாமல் அலைத்து அடர்த்து எதிர்த்துப் போர்செய்ய வந்த காலத்தில், அவர்கள் பக்கத்தில் துணை யாக நின்று அசுரர்கள் மீது நாந்தகம் என்ற வாளை, வீசியெறிந்து அவர்களை எம்புரம் கிட்டச் செய்தவன் (4): கலப்பை, உலக்கை, வில், திருவாழி, திருச்சங்கு, மழு, வாள் ஆகியவற்றைப் போர்க்கருவிகளாகவுடையவன் (5): இந்திரன் பசிக் கோபத்தால் திருவாய்ப் பாடியில் கல்மாரி பொழிந்து, ஆயர்களையும் ஆநிரைகளையும் அலைக்கழித்தபொழுது கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்து அவர்தம் இடர்களைப் போக்கி யவன் (6): கண்ணனைக் கொல்லும் பொருட்டு, தான்மேற் கொண்ட வில் பெருவிழாவிற்காகக் கம்சன் அழைத்த போது அவன் வழியில் நிறுத்தியிருந்த குவலயாபீடம் என்ற யானையையும், அதன் மீது இவர்ந்திருந்த பாகனையும் கொன்றொழித்து, வழியில் மற்போருக்குத் தயாராக நின்ற சாணுாரன் முஷ்டிகன் என்ற மல்லர்களை வானுலகத் திற்கனுப்பி, ஆயுதசாலையிலிருந்த வில்லைப்பிடித்து முறித்தும், உயர்ந்த அரசு கட்டிலின்மீது அமர்ந்திருந்த கம்சன்மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழித்து அற்புத விளையாட்டுகளைப் புரிந்தவன் (7): துவரையை அரசாண்டபொழுது பாண்டவர்க்குத் துணையாக நின்று கெளரவர்களை அழியச் செய்து பாண்டவர்கட்கு அரசைக் கொடுத்தருளியவன் (8); வடமதுரை, சாளக்கிராமம், துவாரகை, அயோத்தி, பதரி ஆகிய இடங்களில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன் (9). உதிரிப் பாசுரங்கள்: ஒரு பாசுரத்தில் பல திவ்விய தேசங்களை அடக்கிப்பாடுவதும் உண்டு. வடதிசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடம்உடை வதரி இடவகை உடைய எம்புரு டோத்தமன் இருக்கை (4.7:9)