பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அந்தர்யாமித்துவ அநுபவம் அந்தர்யாமித்துவத்தை பூரீவசனபூஷணம், பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம்' :பூகதம்.பூமிக்குள்ளே இருக்கின்ற.1 என்று கூறும். எம்பெருமான் நம் இதயத்தில் இருப்பினும், அவனைப் பற்ற வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகில், அந்த இருப்பு கட்புலனுக்குத் தோன்றாமையின் பயன் பட்டிலது, நீர் வேட்கையுற்றவன், மிக்க தொலைவு சென்று பருக வேண்டாதவாறு தான் நிற்கும் நிலத்தின் அடியிலேயே நீர் இருப்பினும், அந்நீர் அவ்வமயம் பருகுவதற்குப் பயன் படாது போன்றுள்ளது. இதனை நம்மாழ்வார், கட்கிலி! உன்னைக் காணுமாறு அருளாய்.2 என்று பேசுவர். பெரியாழ்வாருக்கு இந்த அநுபவம் எளிதில் கிட்டியது. இவருடைய தாய் தந்தையர் இவருக்கு இட்ட பிள்ளைத் திருநாமம் விஷ்ணுசித்தன்.விஷ்ணுவை எப்பொழுதும் தம் மனத்தை விட்டு அகலாது வைத்துக் கொண்டிருப்பவன்' என்பது. இவரும் திருப்பூந்தொண்டில் நந்தவனத்தைச் சீர் செய்யும்போதும், பூச்செடிகட்கு நீர்பாய்ச்சும்போதும், 1. துரீவச. பூஷ. 42. .ே திருவாய். 7.2:3.