பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தர்யாமித்துவ அநுபவம் 21? வடதடமும் வைகுந்தமும் மதில்துவ ராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டென்பால் இடவகை கொண்டனையே (5.4:10) [வடதடம்-திருப்பாற்கடல்: வைகுந்தம்.பரமபதம்; துவாரபதி.துவாரகை.1 என்கின்றார். இடவகைகள் இகழ்ந்திட்டு என்றதில் நோக்கு: ஒருவன் தன் மனைவியை மறந்து மற்றொருத்தி யைக் காதலித்தானாகில், பின்பு ஒரு காலத்தில் மனைவியை விரும்பி அவளுடன் புணரக் கருதக் கூடும். ஆனால் அவனே அவளிடத்துச் சில குற்றங் குறை காரணமாக அவளை இகழ்ந்து விட்டிட்டானாகில் மீண்டு ஒருகாலும் அவளை நெஞ்சில் நினையான்; அதுபோல எம்பெருமான் திருப்பாற்கடல் (வியூகம்), பரமபதம் (பரத்துவம்), துவாரகை (அர்ச்சை) முதலிய இடங்களைத் தானே அறிவு பூர்வமாக இகழ்ந்து விட்டு வந்தனனாதலால் இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளக் கருத்தாகக் கொள்ளலாம். பிறிதொரு பாசுரத்திலும் உருப்பொலிந்த நாவினேனை உனக்குரித்தாக்கினையே (5.4:7) என்கின்றார். இவர்தம் அந்தர்யாமித்துவ அநுபவம் இன்னொரு விதமாகவும் வெளிப்படுகின்றது. கடல்கடைந் தமுதம்கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை கிறைத்துக் கொண்டேன்(5.4:4) |கடல்-திருப்பாற் கடல்; உருகி-உருகப் பெற்று; மடுத்து.உட்கொண்டு; நிறைத் து.தேக்கி.1 என்பது பாசுரம். கடலைக்கடைந்து எடுத்த அமுதத்தினை கலசத்தினுள் நிறைத்தது போல உன்னை நான் என்னுள்ளே நிறைத்துக் கொண்டேன்' என்கின்றார். சம்சாரமாகிய