பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தர்யாமித்துவ அநுபவம் 223 குறை தீர இன்று அச்சங் கெட்டபடியை அருளிச் செய்கின் றார். யமலோகத்திலுள்ளவன் சித்திரகுப்தன் என்ற கணக்கப்பிள்ளை. அவன் இப்பூவுலகிலுள்ள எல்லா ஆன்மாக் களின் பாபங்களைக் கணக்கிட்டு எழுதுவதற்காக நியமிக்கப் பெற்றவன். அவன் தன் தெய்விகத் தன்மையால் சூரியன், சந்திரன், வாயு, அக்கினி, ஆகாயம், பூமி, வருணன், இதயம், யமன், பகல், இரவு, காலை, மாலை, அறம் என்ற பதினான்கு பேர்கள் சாட்சியாக ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையும் எழுதிவைப்பதுபோல் ஒரு சுவடியில் என் தீவினைகளையும் எல்லாம் எழுதி அதன்மேல் யமனுடைய பொறி ஒற்றி (Sea அல்லது முத்திரை) அதனைப் பாது காப்பாக வைத்திருந்தான். இதனை எமது தர்கள் எடுத்துச் சுட்டுவிட்டு ஓடி ஒளிந்துகொண்டனர். இதற்குக் காரணம், எம்பெருமானுக்கு நான் அடியனானதுதான்' என்கின்றார் (2).

திருமாலே, உன்னை நாராயணா!' என்று கூப்பிடு கின்றேனேயன்றி, நன்மை தீமை என்ற ஒன்றையும் அறிகின்றேன் அல்லன். என்பால் இயல்பாகவுள்ள அற்பத் தனத்தினாலும் உன்னைக் குறித்து வஞ்சகச் சொற்களைக் கூறிப் புகழவும் செய்யவில்லை. உன்னை இடைவிடாமல் மனனம் செய்யத்தக்க வழிகளில் ஒன்றையும் அறிந்தவன் அல்லன். ஒரு நொடிப்பொழுதும் ஒழிவின்றி நமோ நாராயணாய என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன். ஒரே ஒரு மிடுக்கு என்பால் உண்டு. அஃது என்னவெனில்: உன் திருக்கோயிலில் வாழும் வைணவன் என்ற நிலை தான்' என்கின்றார் (3).

அடுத்து, வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தை யாக விரித்து அதன் மேலே கள்ள கித்திரை கொள்கின்ற மார்க்கம் காண லாங்கொலென் றாசையி னாலே