பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு கிண்ணபிரானுடைய திருவவதாரம் தொடங்கி அவனுடைய எல்லாத் திருக்குணச் சேஷ்டிதங்களையும் பிறர் பாவனை கொண்டு அடைவே அநுபவித்து மகிழ்ந்த ஆழ்வார் மற்றை ஆழ்வார்களைப் போலவே இவரும் பெண் பாவனையில் - நாயக . நாயகி பாவனையில் (தலைவன் - தலைவி உறவு) அநுபவிக்கத் திருவுள்ளம் கொள்ளுகின்றார். அந்த அநுபவம் அப்பொழுதே தமக்குக் கைகூடப் பெறாமையாலே ஆற்றாமை மீதுார்ந்து தளர்ந்து தானான தன்மையழிந்து ஒர் ஆய மகளின் தன்மையை அடைகின்றார். அப்பொழுது தாம் படும்பாட்டைத் தம் வாயாற் சொல்ல வலியின்றித் தம் தாயார் சொல்லும் பாசுரங்களாக நடைபெறுகின்றன இரண்டு திருமொழிகள். தலைவன் - தலைவி உறவே ஏனைய எட்டு உறவுகளிலும் தலைசிறந்தது; உயிராயது. இந்த முறையில் பரமான்மா வைத் தலைவனாகவும், சீவான்மாவைத் தலைவியாகவும் வைத்து விளக்கும் பாசுரங்கள் யாவும் அகப்பொருள் பற்றியவை. வைணவப் பெருமக்கள் சங்க கால நெறியை யொட்டி ஓர் அகப் பொருள் தத்துவத்தை அமைத்துக் காட்டிய பெருமையைப் பெறுகின்றனர். புருடோத்தம னாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன்னர் உலகிலுள்ள ஆண்மாக்கள் யாவும் பெண் தன்மையினை அடைந்து நிற்கும் என்பது அவர்கள் கண்ட தத்துவமாகும். இத்தத்துவமே ஆழ்வார்க்குத் தலைமகளாகும் தன்மை அமைவதற்கு ஏதுவாகின்றது.