பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 233

  • பகவத் விஷயகாமம் என்று வழங்கப் பெறுகின்றது. மங்கையர் மீது கொள்ளும் காமம் விஷயகாமம். முன்னது பின்னதினின்றும் வேறுபட்டது. ஆயினும் சிற்றின்ப அநுபவ மாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் இந்த பகவத் விஷயகாமத்திற்கும் கூறப்பெறும், சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதன மாயிருப்பது போல பகவத் விஷயாதுபவத்திற்குப் பரபக்தி, உரஞானம், பரமபக்தி இவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் இந்த ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் கூறப் பெறு கின்றன என்று சமயச் சான்றோர்கள் பணிப்பர்.

காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே, பக்திச் சுவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்கனமிருக்க, காதல் சுவையையும் கலந்து பாசுரங்கள் அருளிச் செய்யப்பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? உடல் நலத்திற்குக் காரணமாகிய வுேப்பிலை உருண்டையை உ ட் .ெ கா ள் ள வேண்டியவர்கட்கு வெல்லத்தை வெளியிற் பூசிக் கொடுத்து உண்பிப்பது போலவும், கொயினா மாத்திரைகட்குச் சருக்கரைப் பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின் பிப்பதுபோல வும், சிற்றின்பும் கூறும் வகையால் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடையாய காமத்தினையுடையவர்கட்குக் காட்டப்பெறும் உக்தி முறையாக இறையனார் களவியல் உரையிலும் கூறப் பெற்றுள்ளமை ஈண்டு ஒப்புநோக்கி உணர்தல் தகும். பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஓர் இலக்கிய மரபே இஃது என்று கொள்ளினும் இழுக்கில்லை. இதன் அடிப்படையில் பெரியாழ்வார் திருமொழி பிலுள்ள இரண்டு திருமொழிகள்? விளக்கம் பெறுகின்றன. 8. இறை. கள. சூத். 2இன் உரை காண்க. 9. பெரியாழ். திரு. 3.7, 3.8.