பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:38 விட்டு சித்தன் விரித்த தமிழ் பெருங்கேடு விளையும்; எந்த வேளையில் என்ன கேடு விளையப் போகின்றதென்று எதிர்பார்க்கும் பாவிகள் ஒருவரா? இருவரா? எண்ணற்றவர்கள், ஆகையால் நாம் இவளை விடுதலைப் பறவைபோல் திரிய விடலாகாது; இவள் தானே தலைவனிடம் போய்ச் சேர்ந்தாள் என்று பேர் ஆகாமல், இவளை நீங்கள் கொண்டுபோய் அவனுக்கு உரிய அந்தப்புரத்தில் விட்டு, அங்கிருந்தும் இவள் பதறிப் பதறி ஓடமுடியாதபடி படுகாவலிடுங்கள்: என்று இதனையே திருப்பித் திருப்பிச் சொல்லுகின்றார்களே யொழிய, இவளை வீட்டினுள் நிறுத்தி அடக்குங்கள் என்று சொல்லவல்லார் யாவரும் இல்லையே' என்கின்றாள். * தலைவனுடைய வேண்டுகோளின்படி தலைவியைக் கொடுத்தல் உலகியற்கையாக இருக்க, இவளை நாமாக வருந்திக் கொடுக்க நேரிட்டதே' என்று அனுகூலர்கள் மனம் குழம்புகின்றனர் என்பது உளங் கொள்ளத் தக்கது. (5) திருத்தாயார் சில பெண்களை நோக்கி மேலும் பேசுகின்றாள்: பட்டங் கட்டிப் பொற்றோடு பெய்திவள் பாடக மும் சிலம்பும் இட்ட மாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு) இருக்கலுறாள்; பொட்டப் போய்ப்புறப் பட்டு ‘. . . . . . கின்றிவள் பூவைப்பூ வண்ணா! என்னும்: வட்ட வார்குழல் மங்கை - மீர்! இவள் மால்உறு கின்றாளே (6). (பட்டம்-நெற்றிப்பட்டம்; பொன்தோடு-காதணி, பாடகம்.கழலணி; பெய்து.இட்டு; இட்டம். இஷ்டம் (விருப்பம்); எடுத்தேனுக்கு.வளர்த் .ே த னுக் கு; பொட்டதிடீரென்று; போய். கைவிட்டு}.