பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 விட்டு சித்தன் விரித்த தமிழ் பேசிக் கொண்டிருக்கும் தாயிடம் வருவோம். நம் குடிக்கு இவள் ஒரு பெண்தானே! என்று அன்பு மிகுதியால் கையிலிருந்த செல்வத்தையெல்லாம் செலவிட்டு இவளுக்குச் செய்ய வேண்டிய மங்கல காரியங்களை எல்லாம் செய்து இவளை நாம் காத்து வருவதனால் நமக்குச் சிறிதும் பயன் இல்லை. இது மட்டுமா? நம் குடிக்கே பெருத்த பழிகளையும் விளைவித்து விட்டாள் என்று கலங்கிப் பேசின தாயை நோக்கி உறவினர்கள், தம் வயலில் வளர்ந்த நாற்றை அவ்வயலுக்குரியவர் தம் விருப்பப்படி விநியோகித்துக் கொள்வது போல, இவளை சுவாமியாகிய அவன் தான் செய்ய நினைத்தவற்றைத் தடையின்றிச் செய்து கொள்ளுமாறு மேக வண்ணனாகிய கண்ணனிடத்தில் இவளைக் கொண்டு சேர்த்து விடுங்கள் : என்கின்றனர் (9) மேலும் அவர்கள், மருத்துவன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்துச் செய்யாவிடில் அது கை தவறுவதுபோல, இவள் பதம் பார்த்து நாம் செய் யாமையாலே இவள் கைகழிந்தாள் என்ற அபவாதம் பரவி விடும். இதற்கு முன்னதாகவே இவளை உலகளந் தருளின கண்ணனிடம் சேர்த்து விடுதலே தகுதி என்று கூறுகின்றனர் (10). (2) இரண்டாம் திருமொழி (3.8) அக இலக்கியத் துறையாகிய உடன் போக்கு என்ற துறையில் நடைபெறு கின்றது. எம்பெருமான்மீது தன் மகள் கழிபெருங்காதல் கொண்டு அவனோடு கலவி உண்டாயிற்று என்பதைத் தாய் நன்கு அறிந்தும், உலக அபவாதம் உண்டாகும் முன் இவளை உலகளந்தான் பக்கல் கொண்டு போய்ச் சேர்த்து விடுமாறு உறவினர்கள் சொல்லியும் அவனிடம் கொண்டு சேர்க்காததாலே, அவனே ஒரு நாள் இரவில் வந்து ஒரே படுக்கையில் அன்னையுடன் துயில் கொண்டிருந்த இவளை எழுப்பித் திருவாய்ப் பாடிக்கே கொண்டு போய் விடு கின்றான். கண் விழித்த திருத்தாயார் படுக்கையில் மகளைக் காணாமல் பல வகையாகக் கதறி அழுகின்றாள்.