பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 247 செவ்வனே நேராக நில் என்று சோல்ல, அவளும் அங்ங்னமே நிற்க, அழகிய மீன்போன்ற கண்களையும் கொவ்வைப்பழம் போன்று சிவந்த திருப்பவழத்தையும், கச்சுக்கு அடங்காமல் பெருத்திருக்கின்ற முலையையும், இடையின் அழகையும் பருத்த மூங்கில் போன்ற தோள் களயுைம் நன்றாக உற்று நோக்கி, இப்பெண்பிள்ளையைப் பெற்ற திருத்தாயார் இவளைப் பிரிந்த பின்பு உயிர் தரித்திருக்க மாட்டாள்" என்று சொல்லுவரோ?' என்று ஐயுறுகின்றாள் (5). தொடர்ந்து பேசுகின்றாள் திருத்தாயார்: என் மகள் வேடரையும் மறக்குலத்தாரையும்போல் தண்ணிய (கீழான) குலத்தில் பிறந்தவள் அல்லள். பெருங்குலத்தில் தோன்றியவளான இவளைக் களவுவழியால் கொண்டு போனாலும் போனவிடத்திலாவது திருமண விழாவை யாகிலும் முறைவழுவாமல் உலகோர் முறைப்படி செய் வானாகில் ஒருவாறு என் குறை தீரும். இவளை இங்கிருந்து கடத்திக் கொண்டு போகிறபோது இருவரும் நெஞ்சு பொருந்தும்படி கூடுகையாகிற யாழோர் கூட்டத்தையே (கந்தர்வ விவாகம்) சாத்திர முறைப்படி செய்யப் பெறுகின்ற திருமண் விழாவாக நினைத்து வேறு வகையான திருமணச் சடங்குகளை வெளிப்படையாகச் செய்யா தொழிவனோ? அன்றி திருவாய்ப்பாடியிலுள்ளாரையும் அதைச் சேர்ந்த மதுரை முதலிய நகரங்களிலுள்ளாரையும் அழைப்பித்து விழா நடத்துவனோ? இரண்டு தலையிலு முண்டான குடிப்பிறப்பைப் பாராமல் ஒருவித சாத்திர மரியாதையுமின்றி தனக்கு வேண்டியபடி செய்து கொள்வனோ? " என்று தன் ஐயத்தை வெளிப்படுத்து கின்றாள் (6). மேலும் தொடர்ந்து பேசுபவை: உலகில் குற்றமே கண்ணாயிருப்பவர் எப்படிப்பட்ட பொருள்களிலும் ஏதாவது ஒரு குறையைக் கூறுவது