பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் அகப்பொருள் கலப்பு 249 முடியாது. கண்ணபிரான் திருமாளிகையில் கறவைக் கணங்கள் பலவாகையால் அவை அளவற்ற பாலைத் தரும். பின்பு அதைத் தோய வைத்துத் தயிராக்கிக் கடைவதற்கு பின்மாலைப் பொழுதிலேயே (வைணவர்களின் நடை முறைப் பேச்சு இது!). அதாவது அதிகாலையிலேயே-எழுந் திருக்கவேண்டும். இவ்வாறு உறக்கத்தை ஒழித்து எழுந்து தயிர்கடைவதற்கு என் மகள் எங்ங்னே வல்லவளாவாள்? குளிர நோக்கும்படியான கண்ணபிரான் என் மகளை அறமற்ற இழிதொழில்களில் ஏவி அவளது பெருமைகளைக் குலைப்பனோ? அன்றி, பெருமைக்குத் தக்கவாறு திருவுள்ளம் பற்றுவனோ? என்று ஐயுறுகின்றாள் (9). இங்ங்ணம் பலபடியாகப் புலம்பி உருகிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே விழித்துக் கொள்கின்றார் பெரி யாழ்வார் தியானம் கலைந்து. இந்தத் திருத்தாயார் யார்? அந்த ஒரு மகள் யார்? தாயார் யாரும் இல்லை, விஷ்ணுச் சித்தர்தான்! பக்திப் பெருங்காதலில் இழிந்து போன அவர் உள்ளமே அந்த ஏகபுத்திரி. அல்லது தன் வளர்ப்பு மகளைக் குறித்தே இப்படி ஒரு சூசகமான கனவு கண்டாரா? என்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றது!