பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 விட்டு சித்தன் விரித்த தமிழ் அகத்திணைக் கூறுகள் ஆழ்வார் பாசுரங்களில் இடம் பெற்றுத் திகழ்கின்றன. அவை கூறும் மெய் விளக்கக் கருத்துகள் ஒரு புறமிருக்க, ஏனையவை உலகியலை யொட்டிச் சமுதாய நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப் பெற்றுள்ளன. இங்ங்னம் ஆழ்வார்கள் அமைத்துப் பாடியுள்ள காதல் துறைகளுள் துாது, அறத் தொடுநிலை, கட்டுவிச்சி குறி பார்த்தல், வெறி விலக்கு, உடன்போக்கு முதலியவை அற்புதமாக அமைந்துள்ளன, இவற்றுள் எல்லாம் ஆழ்வார்களின் சமுதாயக் கண் ணோட்டத்தைக் காணலாம். பெரியாழ்வார் திருமொழி யில் நற்றாய் இரங்கல் (3,7), தலைவன் பின் சென்ற மகளைக் குறித்துத் தாய் பலபடி உன்னி ஏங்குதல் (3.8). என்ற திருமொழியில் இவை காணப்பெறுகின்றன. இவற்றின் விளக்கம் இந்நூலில் பிறிதோரிடத்தில் தரப் பெற்றுள்ளது." காட்டுப் பாடல்களின் தாக்கம் : பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய ஆழ்வார்களின் பாசுரங்கள் யாவும்: பொது விருப்பானவை. நாட்டு மக்கள் யாவரும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டமையால் ஆழ்வார்களின் சமுதாயக் கண்ணோட்டம் நாட்டுப் பாடல்களின் பாணியைப் பின்பற்றிப் பாசுரங்களை அமைக்கும் அளவிற்குப் போயுள்ளது. பெரியாழ்வார் திருமொழியில் (3.9) வருகின்ற உந்தி பறத்தல்' என்ற திருமொழியில் பாசுரந்தோறும் பாடிப்பற" என்றது உந்திப் பறத்தல்' என்பதைக் குறிக்கும்; இறுதிப் பாசுரத்தில் உந்தி பறந்த' என்று வருவதைக் காணலாம். உங்தி பறத்தல் என்பது, மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று. இது பிங்கலந்தை நிகண்டால் அறியப்பெறுகின்றது. இது பெண்பிள்ளைகள் கூட்டமாகக் கூடி விளையாடுவதொரு விளையாட்டு என்ற அளவே புலப்படுகின்றது; மணிவாசகர் அருளியுள்ள 6 . 12-வது கட்டுரையில். ஆண்டுக் கண்டு கொள்க.