பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii பெறவேண்டியதாகும். திரு. நாயுடு அவர்களும் திரு. T.M. நாராயணசாமி பிள்ளையும் மேற்கொண்ட முயற்சியால் தான் திரு.பு.ரா. புருடோத்தம நாயுடு அவர்களைக் கொண்டு திருவாய்மொழி - ஈட்டின் தமிழாக்கம்’ (10 தொகுதிகள்) வெளி வந்தது. இந்த இரு பெரியார் களின் ஆலோசனையை ஏற்று டாக்டர் A.L., முதலியார் (சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்) இந்தப் பெரும்பணியை - தெய்வப்பணியாக - ஏற்று பல்கலைக் கழகப் பணியாகச் செய்வித்ததை வைணவ உலகம் நன்றி யுடன் போற்றும். பச்சையப்பன் கல்லூரி அறம், சர். தியாகராசச் செட்டி கல்வி அறம், A.R.C. கல்வி அறம் போன்ற பல அறநிறுவனங்களில் பல்லாண்டுகள் தலை வராக இருந்து ஆற்றிய கல்விப் பணிகளை எவரும் மறவார். திரு. நாயுடு அவர்கள் கட்டடங்கள் எழுப்புவதில் நாட்டம் உள்ளவர். இவர் பணியாற்றிய நிறுவனங்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்டடம் எழும்பும், சேத்துப்பட்டி லுள்ள பச்சையப்பன் கல்லூரிக் கட்டடம், திருப்பதியில் வேங்கடேசுவரா கலைக் கல்லூரிக் கட்டடம், பதுமாவதி மகளிர்க் கல்லூரிக் கட்டடம் (இப்போது பல்கலைக் கழகத் திற்கு வழங்கப்பட்டுள்ளன) இவர் காலத்தில் எழுந்தவை. இதனால் இவர் வீட்டு வசதி கோவாப்பரேட்டிவ் நிறுவனத் தின் தலைவராகவும் நகர வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத் தந்தையாகவும் அதன் காவலராகவும் பணி யாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் காலத்தில்தான் சென்னை காந்திநகர்க் குடியிருப்பும் வேங்கடேசபுரக் குடியிருப்பும் தோன்றின. இங்ங்னம் பல்லாண்டுகள் பல துறைகளில் சீரிய பணியாற்றிய இப்பெரியாரை நடுவண் அரசு பத்மபூரீ (தாமரைச் செல்வர்)என்ற விருதை அளித்துச் சிறப்பித்தது. ஒருசமயம் திரு.பு.ரா. புருசோத்தம நாயுடு அவர்கள் இப்பெரியாருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். (1962 என்பதாக நினைவு). அன்று முதல் நான் இவரைச்