பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் படிமங்கள் 275 காற்றப்புலப் படிமங்கள் (Olfactory images): மூக்கினால் முகர்ந்து அநுபவிக்கக் கூடிய படிமங்களாக அமைத் திருப்பவை இவை. பாலொடு நெய்தயிர்ஒண் சாக்தொடு சண்பகமும் பங்கயம் கல்லகருப் பூரமும் காறிவர (1.6:9) செங்கீரைப் பருவத்தில் வரும் ஒரு பாசுரம். இதில் நெய் பால் தயிர்...கருப்பூரம் நாறுதல் நாற்றப் புலப் படிமங்கள். மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய் (2.7:2) இதில் மல்லிகை மணம் கமழ்தல் நாற்றப்புலப் படிமம். மலமுடை யூத்தையில் தோன்றிற் நோர்முல ஆத்தை ை மலமுடை பூத்தையின் பேரிட்டால் (4.6:1) இதில் மலமுடை ஊத்தை, மலஊத்தை இவை நாற்றப் புலப் படிமங்கள். ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வதுபோல் உங்கள் மூத்திரப் பிள்ளையை (4.6:9) இதில் ஊத்தைக்குழி, மூத்திரப் பிள்ளை நாற்றப்புலப் படிமங்கள், * - கொப்புலப் படிமங்கள் (Tactile images): தொடுதலால் அநுபவிக்கக் கூடிய படிமங்கள் இவை. சித்திர கூடத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட (3.40:6) இதில் முலைதீண்டில் நொப்புலப் படிவம் என்னைப் புறம்புல்குவான் (1.10:4). இதில் புறம்புல்குதல் நொப்புலப் படிமம்.