பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 விட்டு சித்தன் விரித்த தமிழ் @uššū ūsoio ulou'lisir (Kinesthetic images): 205 பொருள் அல்லது மனிதனின் இயக்கத்தை விளக்குவது இந் நிலைப் படிமம் ஆகும். ஓடுவார் விழுவார் உகந்தா லிப்பார் நாடுவார் கம்பிரான் எங்குத் தான் என்பார் (1 .2:2) இது கண்ணன் பிறந்ததைக் கேட்டு ஆயர்பாடி மக்கள் குதுரகவித்ததைக் காட்டுவது. இதில் ஒடுதல், விழுதல் முதலியவை இயக்கப்புலப் படிமங்கள். காயும்கீர் புக்குக் கடம்பேறிக் காளியன் தீயப ணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தக னாய்கின்ற ஆயன்வந் தப்பூச்சி காட்டு கின்றான் (2.1:3) {காயும் நீர்.கொதிக்கின்ற நீர், கடம்பு. கடம்பமரம்; பணம்.படம்; ஆர்க்க.ஒலிக்க: வேய்.மூங்கில்! சிறுபிள்ளைகள் பூச்சிகாட்டி விளையாடுவதைப் போல, பிள்ளைப் பெருமாளும் அக்காலத்தில் பூச்சிகாட்டி விளை யாடியதை அக்காலத்துப் பெண்கள் கண்டு அநுபவித்து உகந்ததைப் பெரியாழ்வாரும் யசோதை நிலையிலிருந்து கொண்டு அந்த விளையாட்டை அநுபவித்து இனியரா வதைக் காட்டும் பாசுரம் இது. நீர்புகுதல், கடம்பு ஏறுதல், பணத்தில் பாய்ந்தாடுதல் இவை இயக்கப்புலப் படிமங்கள். வேயின் குழலுதுதல் செவிப்புலப் படிமம். இக் கலவைப் படிவம் சிறுவன் கண்ணனின் விளையாட்டினை நம் மனத் திரையில் எழச்செய்து நம்மை மகிழ்விக்கின்றது. இந்த விளையாட்டை, காளியன் பொய்கை, கலங்கப் பாய்க்திட்டுஅவன் ள்ேமுடி ஐந்திலும் நின்று கடம்செய்து * . . . . . மீள அவ னுக்கருள் செய்த வித்தகன் (3.9:7)