பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் படிமங்கள் 2婷 இரண்டு கலவைப் படிமங்களைக் காட்டினேன். இன்னும் இரண்டு காட்டுவேன். மாயச் சகடம் உதைத்து மருதிறுத்து ஆயர்களோடுபோய் ஆகிரை காத்து அணி வேயின் குழலூதி வித்தக னாய்கின்ற ஆயர்கள் ஏற்றினைப் பாடிப்பற (3.3:9) (இறுத்து-இற்று விழும்படிபண்ணி; அணி.அழகியர் இதில் சகடம் உதைத்தல், மருது இறுத்தல், ஆயர்களோடு போதல்-இவை இயக்கப்புலப்படிமங்கள். குழலுதுதல், செவிப்புலப்படிமம். இக்கலவைப் புலப்படிமங்கள் ஆநிரை மேய்த்தானை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்து கின்றது. குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல் கின்றாடு கணமயில் போல் நிறமுடைய நெடுமாலூர் குன்றுண்டு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி மன்றுடு தென்றல்உலாம் மதிலரங்கம் என்பதுவே (4.8:9) (குன்று-மலை: முகில்-மேகம்; குரை.ஒலிக்கின்ற; கணம்-திரள் நிறம்-வடிவழகு நுழைந்து-புகுந்து, அணவி-வியாபித்து; உலாம்.உலவுகின்ற; இதில் குன்றாடு முகில், நின்றாடுமயில், தென்றல் பொழிலில் நுழைதல், அது கொடி இடையார் முலை அணவுதல், மன்றுாடு தென்றல் உலவுதல், நின்று ஆடுமயில் கனம், மலைகளிலுள்ள சோலைகளிலே தென்றல் துழைதல்-இவை இயக்கப்புலப் படிமங்கள்; குரைகடல் செவிப்புலப்படிமம்; கொழு முகில், நிறம் உடைய நெடுமால், கொடி இடையார் முலை.இவை கட்புலப் படி