பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் திருத்தொண்டும் 7 துளசி செழித்துக் காடாக வளர்ந்திருக்கின்றது; இலைகள் தளதளவென்று பொங்கித் தெய்வ மணம் வீசுகின்றன. பச்சைக் கம்பளம் விரித்தால் போல் இருந்த புல்தரையைத் தாண்டி அவர் செறிந்து வளர்ந்திருக்கும் துளசிச் செடி யருகில் ஒர் இளங் குழவி தென்படுகின்றது. இயற்கை கழகுகளுக்கிடையே இயற்கைத் தாய் இப்படி வடிவங் கொண்டுள்ளாளோ? என்று வியப்பெய்துகின்றார் விஷ்ணு சித்தர். பெரிய பிராட்டியாரே தம் செந்தாமரைக் கோயிலிலிருந்து வெளிப்பட்டு இப்படி நாம் பார்க்கும் ஒரு குழந்தை வடிவம் கொண்டாரோ?' என்ற அதிசயம் அவர் மனத்தில் ஏற்படுகின்றது.

பாகவதர்களின் புண்ணியமும் அடியேனின் பேறும் தான் இந்த உருவமாக வந்திருக்க வேண்டும். என் சிறு குடிலுக்கு எம்பெருமான் அனுப்பிய அருளின் சோதி இது என்று சிந்திக்கின்றார். குழந்தையை எடுக்கின்றார்; மார்போடு அணைத்துக் கொள்ளுகின்றார்; உச்சி மோக்கின்றார்; முத்தமிடுகின்றார். எம்பெருமானுக்கு இன்று நந்தவனத்தில் கிடைத்த தெய்வ மலர் இது! என்று. தமக்குள்தாமே சொல்லிக் கொண்டு இல்லத்தை நோக்கி விரைகின்றார். அன்று, அப்போதே, தம்முடைய பக்தி, ஒரு புதிய ஒளியும் அழகும் பெற்று விட்டதாக உணர்கின் றார். விஷ்ணுசித்தர் ஆலிலைப் பள்ளியானை நோக்கி, :இந்த அற்புத மலரை உனக்கே படையலாக்குகின்றேன். உன் சித்தம் நிறைவேறுவதாகுக' என்று வேண்டிக் கொள்கின்றார். வீடு, வாசல், தோட்டம், துரவு, விளை நிலம், நந்தவனம், எல்லாவற்றையும் அவனுடைய சேவைக்கே அர்ப்பணம் செய்து தமது வாழ்வைப் பரிசுத்த மாக்கிக் கொண்ட பெரியார், தமது வைராக்கிய உள்ளத்தை அன்று கவர்ந்துவிட்ட அந்தக் குழந்தையையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து விடுகின்றார்."

7. இதன் விவரம் ஆழ்வார்கள் ஆராஅமுது' என்ற நூலின் ஞானப்பூங்கொடி’ என்ற கட்டுரையில் காண்க.