பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 - விட்டு சித்தன் விரித்த தமிழ் கண்டன கண்டனங்கள், வயிரக் குப்பாயங்கள், வாதச் சூறாவளிகள்' இவற்றால் துளிகளை எழுப்பி அறிவைச் சூறையாடிக் கொண்டிருந்த வாதிட சிங்கங்கள், பரசமய கோளரிகள், தருக்கப் புலிகள் :விஷ்ணுச்சித்தர் வருகின்றார்! வில்லிபுத்துாரார் வருகின்றார்!’ என்ற ஒலிவைக் கேட்கின்றனர். மதவெறியர்களின் உறுமல் களும், தார்க்கீகர்களின் கர்ச்சனைகளும், சூனியவாதிகளின் கணைப்புகளும் தாமாகவே அடங்கி விடுகின்றன. ஒரே அமைதி நிலவுகின்றது. அவையில், சாந்தமான திருமுக மண்டலம், பன்னிரு திருமண்காப்புப் பொலியும் செம்மேனி இவை கண்டவர்களையெல்லாம் வசீகரிக்கின்றன. அதிசய மான தேசையும், பொலிவையும் காண்பவர்கள் யாவரும் அந்தக் கணமே கனிந்த கைகூப்புடன் அஞ்சலி செய் கின்றனர்; வழியமைத்துத் தருகின்றனர். சாந்தம் நிலவும் அவருடைய திருமுகமண்டலத்தைக் கண்டதும் அரசனும் தன் சீரிய சிங்காதனத்திலிருந்து எழுந்து அவருடைய அடிகளில் தம் முடிபட வீழ்ந்து வணங்குகின்றான். உள்ளத்தைத் துருவிப் பார்த்து நினைவுகளையெல்லாம் உணர்ந்து கொண்டதுபோல், அன்பும் இரக்கமும் நிறைந்த அவருடைய கண்கள் அரசனைக் குளிரக் கடாட்சிக்கின்றன. அந்தப் பெரியவரை அரசனும் புரோகிதரும் வணங்கி சிங்காதனத்தில் அமரச் செய்து அருகில் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கின்றனர். வாதத்தில் கலந்து கொள்ள வந்த புலவர்களிடையே பொறாமைக் காய்ச்சல் அதிகமாகின்றது. அழுக்காறு உடையாருக்கு அதுவே சாலும்' என்ற வள்ளுவர் வாக்கை அறிந்திருக்கும் புலவர்களின் பரம்பரைச் சொத்தாக அழுக்காறு இறங்கி வருவதை இன்றும் காண்கின்றோ மல்லவா? இவர் எங்களைப்போல் வேதம் முதலிய அளவிறந்த சாத்திரப் பயிற்சி பெற்று அதில் தேர்ந்தவரா?" 3. குறள்-168 (அழுக்காறாை ம)