பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரத்துவ நிர்ணயம் 15 என்று முணுமுணுக்கினர் வேதவிற்பன்னர்கள். இவர்கள் :இவருக்கு வேதங்களில் சிறப்பான பயிற்சி இல்லை : என்கின்றனர். வேதம் தெரிந்தாலும் இவர் ஆகமம் நன்றாய் அறிவாரா?' என்கின்றனர் ஆகமவாதிகள். வேதங்களில் ஞானம் இருப்பினும், அளவை நூல் (தர்க்கம்) அல்லவா சமய ஞானத்திற்கு உயிர்' என்கின்றனர் தருக்க வாதிகள், யோகியர் இவர் பக்தர் தானே! என் கின்றனர். சமய ஞானமே அஞ்ஞானம்தான்; சக்தி முழுவதும் மூடபக்திதான்!” என்று நக்கலுடன் பரிகசிக் கின்றனர் நாத்திகர்கள். இந்தக் கூச்சல்கட்கிடையே அரசன் செல்வ நம்பியை நோக்கி இனி நாம் செய்ய வேண்டிய தென்ன?’ என்று சாடையாகக் கேட்கின்றான். நம்பியும் கவலை வேண்டா; இவர்களை வெற்றி கொள்வார்!’ என்று குறிப்பாகப் பதிலிறுக்கின்றார். எல்லோருடைய வாதங்களும் ஒருவாறு முடிந்தபின்னர் விஷ்ணுசித்தர் தம் வாதத்தைத் தொடங்குகின்றார். சமய வாதிகள் விடுத்த வினாக்கட்கெல்லாம் அமைதியாக மறுமொழி பகர்கின்றார். அவர்களுடைய பொறாமை யைப் பொறுமையினாலும், பகைமை உணர்ச்சியை அன்புணர்ச்சியாலும் வெல்கின்றார். தீய எண்ணங்களை நல்லெண்ணங்களாலும், அறியாமையை அறிவினாலும், வீண்பெருமையைப் பணிவினாலும் வென்று வாகை சூடு கின்றார். முரட்டுத்தனமான இதயங்களை இரக்கப் பாங்கான இதயத்தாலும் நம்பிக்கையினாலும் வென்று வெற்றிமாலை சூடுகின்றார். காரணமில்லாத காரியமே இல்லை என்று அளவியல் முறையில் நிலை நாட்டி இவ்வுலகின் காரணப்பொருளே கடவுள் என்று அறுதியிடுகின்றார். எந்த ஒரு பொருளால் எல்லாப் பொருள்களும் உண்டாகின்றனவோ, எந்த ஒரு பொருளால் எல்லாப் பொருள்களும் நிறைவு பெறு கின்றனவோ, எந்த ஒரு பொருளில் எல்லாப் பொருள்களும் இறுதியில் சேர்ந்து விடுகின்றனவோ அந்தப் பரம்பொருளே